பல நாட்டு ராஜதந்திரிகள் ஆலோசனை காரணமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா செல்லவில்லை என்கிறார் சுமந்திரன்
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்காததற்கு பன்னாட்டு ராஜதந்திரிகளின் ஆலோசனைகளே காரணம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ள வேண்டுமென்று ஒருமனதாக அதன் நாடாளுமன்றக் குழுவினர் முடிவெடுத்ததாகவும், ஆனால் அதற்கு எதிராக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் ஒரு அறிக்கையை வெளியிட்டதாக, கூட்டமைப்பின் மற்றொரு உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த ஞாயிறன்று தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஜெனீவா கூட்டத்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு இல்லை என்றும், பன்னாட்டு அமைப்புகளின் ஆலோசனைகளை அடுத்தே தாங்கள் அங்கு செல்லுவதில்லை என்று முடிவெடுத்ததாக சுமந்திரன் தமிழோசையிடம் கூறினார்.
அவர் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்
BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.