bbc.co.uk navigation

'அத்திடிய சரணாலயம் அபாயத்தில்': சூழல் ஆர்வலர் விஸ்வலிங்கம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 பிப்ரவரி, 2012 - 17:48 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

அத்திடிய பறவைகள் சரணாலயப் பகுதியை பாதுகாக்க அரசிடம் உரிய வேலைத்திட்டமில்லை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

கொழும்பின் புறநகர் பகுதியான பெல்லன்வில-அத்திடிய என்ற இடத்தில் உயிரியல் பல்வகைத் தன்மைக்காக பாதுகாக்கப்பட்ட பெரும் நிலப்பரப்பில் பாதுகாப்பு அமைச்சும் காணி அபிவிருத்தி அமைச்சும் இணைந்து வடிகால்களை அகலப்படுத்தும் வேலைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன்மூலம் பிரதேசத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஈசீடீ என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அமைப்பு கூறுகிறது.

வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக பல ஆண்டுகளுக்கு முன்னர் பிரகடனப்படுத்தப்பட்ட நிலப்பகுதியில் அரசின் சுற்றுச்சூழல் நிறுவனங்களின் உரிய பராமரிப்பு இன்மையால் உயிரியல் பல்வகைத்தன்மைகள் ஏற்கனவே அழிவடைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ். விஸ்வலிங்கம் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

அந்தப் பகுதியில் வடிகால்களை அகலப்படுத்துவது எஞ்சியிருக்கும் உயிரினங்களையும் அழிக்கும் செயல் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இதுதொடர்பில் கேட்டபோது, இந்தப் பிரச்சனை தனது கவனத்துக்கு இதுவரை கொண்டுவரப்படவில்லை என்று இலங்கையில் வனஉயிர் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தமிழோசையிடம் கூறினார்.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.