bbc.co.uk navigation

'மண்ணெண்ணெய் மானியம் கண்துடைப்பு': வேலாயுதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 19 பிப்ரவரி, 2012 - 17:28 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

200 ரூபாய் மண்ணெண்ணெய் மானியம் மலையக மக்களுக்கு பயனளிக்காது என்கிறார் தொழிற்சங்கத் தலைவர் கே. வேலாயுதம்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

ஐந்து லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகின்ற மண்ணெண்ணெய் மானியம் மலையக பெருந்தோட்டத்துறை மக்களை எந்தளவுக்கு சென்றடையப் போகின்றது என்பது கேள்விக்குறியென்று தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே. வேலாயுதம் தமிழோசையிடம் கூறினார்.

மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு மட்டும் மாதத்திற்கு வழங்கப்படுகின்ற 200 ரூபாய் மானியம் இரண்டு லீட்டர் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு கூட போதுமானதல்ல என்றும் வேலாயுதம் தெரிவித்தார்.

மலையகத்தில் மின்சார வசதியற்ற, மண்ணெண்ணெய் விளக்கை நம்பியிருக்கின்ற குடும்பங்களுக்கும் சமையல் தேவைகளுக்காக மண்ணெண்ணெய் அடுப்பை நம்பியிருக்கின்ற குடும்பங்களுக்கும் 200 ரூபா மானியம் உதவாது என்றும் அவர் கூறினார்.

ஆனால், அரசில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த, பொருளாதாரத்துறை துணை அமைச்சர் முத்து சிவலிங்கம் இந்தக் குற்றச்சாட்டுக்களை தமிழோசையிடம் மறுத்தார்.

மலையகத்தில் மண்ணெண்ணெய்க்கான தேவை மிகக்குறைவாகவே இருப்பதாகவும் துணை அமைச்சர் கூறினார்.

இலங்கையில் மண்ணெண்ணெய் விலை 35 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளமை மலையக பெருந்தோட்டப் புற மக்களை கடுமையாகப் பாதிக்கும் என்று கூறிய சில தொழிற்சங்கங்கள் அண்மையில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.