உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் விதிகளை மீறும் மத்திய அமைச்சர்கள் மீது நடவடிக்கை தேவை என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி எஸ் கிருஷ்ணமூர்த்தி
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
இந்தியாவின் உத்திரபிரதேச மாநில சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இஸ்லாமியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அவர் அதற்காக வருத்தம் தெரிவிக்க அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மத்திய உருக்குத்துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா அதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் தேவையென்றால் தம்மிடம் விளக்கம் கோரட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படியான செயல்பாடுகள் எதை வெளிகாட்டுகின்றன என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் டி எஸ் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்துக்களை இங்கே கேட்கலாம்.
BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.