bbc.co.uk navigation

"நாடு நகர சட்டதிருத்தம் தேவையற்றது"-சந்திரகாந்தன்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 பிப்ரவரி, 2012 - 17:42 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கை அரசு கொண்டுவந்துள்ள சர்ச்சைகுரிய நாடு நகர திட்டமிடல் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்கிறார் கிழக்கு மாகண முதலமைச்சர்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையின் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சர்ச்சைகுரிய நாடு நகர திட்டமிடல் திருத்த மசோதா 13.2.2012 அன்று கிழக்கு மாகாண சபையில் விவாதத்துக்காக வந்த போது அதில் திருத்தங்கள் தேவை எனக் கூறி அதன் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்ட மசோதா தேவையற்றது என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று கிழக்கு மாகாண சபையின் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார். எனினும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் மாகாண சபை என்பதால் அதில் சில திருத்தங்களை அவர் கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்துடன் தான் முழுமையாக உடன்படுவதாகவும், அது தொடர்பில் அவர்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய பேட்டியை இங்கே கேட்கலாம்

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.