'மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பிலேயே சர்வதேசத்தின் உதவி நாடப்படுகிறது'
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
உள்நாட்டிலேயே இனப்பிரச்சனைத் தீர்வுத்திட்டத்தை எட்டவேண்டுமென்பதில் தமக்கும் மாற்றுக்கருத்து இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகிறது.
ஆனால், இலங்கையில் மனிதாபிமான சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களின் மீறல்கள் பற்றிய விடயங்களிலேயே சர்வதேசத்தின் உதவியை நாடுவதாகவும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இனப்பிரச்சனை தீர்வு திட்டம் தொடர்பில் தமது கட்சிக்கும் ஆளும் பிரதான கட்சிக்குமிடையில் இணக்கப்பாடொன்றை எட்டியதன் பின்னர் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்துகொள்வதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்பதையே தாம் ஜனாதிபதியிடமும் கூறியிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.
இலங்கை இனப்பிரச்சனைக்கு வெளிநாட்டு சக்திகளின் தீர்வுத்திட்டம் தேவையில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுதந்திர தின உரையில் கூறியுள்ளதை இட்டு தமிழோசை கேட்ட போதே, எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது
(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.