'கிழக்கு் பல்கலை. துணைவேந்தர் பதவி தமிழருக்கே': அமைச்சர் கருணா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 ஜனவரி, 2012 - 18:06 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 'தகுதிவாய்ந்த அதிகாரியாக' பணியிலிருந்தவரை பதில் துணை வேந்தராக நியமிக்கும் அரசின் நடவடிக்கை கைவிடப்பட்டது': அமைச்சர் கருணா

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமிக்கப்படும்வரை அங்கு தகுதி வாய்ந்த அதிகாரியாக பணியிலிருந்துவரும் பெரும்பான்மை இனத்தவர் ஒருவரை பதில் துணை வேந்தராக நியமிப்பதற்கு அரசு எடுத்திருந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக துணையமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் ஒருவரை நியமிப்பதற்காக தமிழர்கள் மூவரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கு முன்னதாக குறுகிய கால நிர்வாகத்துக்காக தகுதிவாய்ந்த அதிகாரியாக பணியில் இருந்த ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக துணையமைச்சர் முரளிதரன் குறிப்பிட்டார்.

இந்த சூழ்நிலையில், உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க அந்த அறிவித்தலை உடனடியாக ரத்துசெய்து, புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தம்மிடம் உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

More Multimedia

bbc.co.uk navigation

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.