இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை- ஒரு ஆய்வு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 26 ஜனவரி, 2012 - 18:14 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இலங்கையில் அதிகரிக்கும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளூரில் விலைவாசிகளை அதிகரிக்கும் என்று கவலைகள் எழுந்துள்ளன

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கையில் இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் உள்ள இடைவெளியான வர்த்தகப் பற்றாக்குறை இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமாகவுள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2011 ஆம் ஆண்டு இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை 238 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் அறிக்கை கூறுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததுள்ளதும், நாட்டில் நடைபெற்று வரும் பொருளாதார அபிவிருத்திக்கு கூடுதலாக இறக்குமதிகளை செய்ய வேண்டியுள்ளதும் இந்த வர்த்தகப் பற்றக்குறைக்கு ஒரு முக்கிய காரணம் என இலங்கை அரசு கூறுகிறது.

சர்வதேச அளவில் 2010 நவம்பர் மற்றும் 2011 நவம்பர் இடையேயான காலப்பகுதியில் கச்சா எண்ணெயின் விலை பாரல் ஒன்றுக்கு சுமார் 85 டாலர்களிலிருந்து 113 டாலர்களாக அதிகரித்தது என்பது இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறை இருமடங்குக்கும் மேலாக உயர்வதற்கான ஒரே காரணமாக இருக்க முடியாது என்று கூறுகிறார், கொழும்பு பல்கலைகழக பொருளாதாரத்துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் கணேசமூர்த்தி.

அவரது கருத்துக்களை இங்கே கேட்கலாம்

More Multimedia

bbc.co.uk navigation

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.