BBC tamil

முகப்பு > இலங்கை

சிலாபத்தில் மீனவ அமைப்புக்கள் போராட்டம்

Facebook Twitter Google+
15 பிப்ரவரி, 2013 - 16:25 ஜிஎம்டி
கடந்த வருடம் அண்டனி பெர்ணாண்டோவின் இறுதி நிகழ்வில் பிடிக்கப்பட்ட படம்

இலங்கையின் சிலாபத்தில் எண்ணெய் விலையேற்றத்தை எதிர்த்து கடந்த வருடம் நடந்த போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ஒருவரின் மரணத்தை நினைவு கூர்ந்து மீனவ அமைப்புக்கள் போராட்டம் நடத்தின.

கடந்த வருடம் நடந்த இத்தகைய போராட்டம் ஒன்றின் போது சுட்டுக்கொல்லப்பட்ட அண்டனி பெர்ணாண்டோ என்னும் மீனவரின் மரணத்தை நினைவு கூருமுகமாகே மீனவ அமைப்புக்கள் இந்த போராட்டத்தை நடத்தின.

சிலாபம் நகரில் இந்த போராட்டத்தை நடத்துவதற்கு மீனவ அமைப்புக்கள் திட்டமிட்டிருந்தபோதிலும், நீதிமன்றத்தினால் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு இந்த போராட்டத்தை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் போராட்டக்காரர்களிடம் அறிவித்துள்ளனர்.

இதனால், சிலாபம் நகருக்கு வெளியே தாம் தமது போராட்டத்தை நடத்தியதாக அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சிறிவிமுக்தி மீனவ பெண்கள் அமைப்பின் இணைப்பாளரான கமலநாதன் தீபா சுபாஷினி பிபிசியிடம் கூறினார்.

அதேவேளை, கடந்த வருடம் எண்ணெய் விலையேற்றத்தை தடுக்க போராட்டம் நடத்தப்பட்ட போதிலும், அந்தப் பிரச்சினை கூட இன்னமும் தீரவில்லை என்றும் அவர் கூறினார்.

அவர் பிபிசிக்கு வழங்கிய முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter