BBC tamil

முகப்பு > உலகம்

சீன அணைக்கட்டு சரியும் ஆபத்து : லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Facebook Twitter Google+
18 ஏப்ரல், 2012 - 09:49 ஜிஎம்டி
யங்ஸ்டிஸ் ஆற்றில் ஒரு அணை கட்டப்படுகிறது

சீனாவின் பெரிய நீர்த்தேக்க அணைக்கட்டு ஒன்றில் மண்சரிவு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால், அருகில் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மேலதிகமாக தமது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியுள்ளதாக சீன அரச ஊடகம் கூறியுள்ளது.

த்ரி கோர்ஜஸ் அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள மண் சரிவினால் அணைக்கட்டு உடையலாம் என்ற அச்சம் காரணமாகவே இந்த மக்கள் வெளியேற்றப்பட வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தை வசதியைக் கொண்டுள்ள யங்ஸ்டிஸ் ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டுள்ள இந்தப் பாரிய அணைக்கு அருகில் இருந்து ஏற்கனவே பத்து லட்சம் மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டில் இந்த அணைக்கட்டில் தேங்கக்கூடிய நீர், அதன் உச்ச அளவை எட்டியது முதல், தொடர்ச்சியாக பல மண்சரிவுகளை இந்த அணைக்கட்டு எதிர்கொண்டு வருகிறது.

இந்த நீர்த்தேக்க திட்டம் காரணமாக கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட மக்களுக்கு போதுமான வசதிகளைச் செய்ய முடியவில்லை என்று சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

புதுப்பி

இதைப் பகிர்க

Facebook Google+ Twitter