BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
தனிநபர் தகவல் பாதுகாப்பு
 
 
தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கை விளக்கம்

உங்களது தனிநபர் தகவல்களை நாங்கள் சேகரிக்கும் விஷயத்தில் நாங்கள் கொண்டுள்ள கொள்கையை விளக்குகிறது பின்வரும் அறிக்கை










1. தனிநபர் தகவல் பெறுவதன் நோக்கம்

எங்கள் இணையதளத்தின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிற போது உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை (உதாரணமாக பெயர், மின்அஞ்சல் விலாசம் முதலியன) சமர்ப்பிக்குமாறு அவ்வப்போது உங்களிடம் கேட்கப்படும். செய்திக் கடிதங்கள், போட்டிகள், ‘செய்தி அறிவிப்பு மின்அஞ்சல்’, நேரடி அரட்டை, செய்திப் பலகைகள், bbc.co.uk இணையதள உறுப்பினராயிருத்தல் போன்றவை எமது சேவைகளாகும்.

பொருத்தமான இடங்களில் உங்களைப் பற்றிய தகவல்களை நிரப்புவதன் மூலம் பிபிசியும் அதற்காக சேவைகளை வழங்குவோரும் நீங்கள் தெரிவுசெய்கிற சேவையை உங்களுக்கு வழங்க நீங்கள் வகைசெய்கிறீர்கள். உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை நீங்கள் தருகின்ற ஒவ்வொரு சமயத்திலும், இந்த கொள்கையின் பிரகாரமே நாங்கள் அதனை கையாள்வோம். நீங்கள் பெற விரும்புகிற தகவல்களை வழங்கும் வகையிலேயே எங்களது சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நடைமுறையில் உள்ள சட்டங்களை பிபிசி தவறாது பின்பற்றும். மேலும் இதுகுறித்த சிறந்த நடைமுறையை கடைப்பிடிக்கவேண்டும் என்கிற நோக்கத்தை பிபிசி பெற்றுள்ளது.


2. பார்வையாளர்கள் பற்றிய தகவல்கள்

நீங்கள் bbc.co.uk இணையதளத்திற்கு செல்லும் சமயத்தில், நீங்கள் பார்க்கின்ற பக்கங்களோடு சேர்த்து குக்கி எனப்படும் ஒரு விஷயமும் உங்கள் கணினிக்குள் இறங்குகின்றது. கிட்டத்தட்ட எல்லா இணையதளத்திலுமே இது நடைபெறும் ஏனென்றால் உங்கள் கணினி ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை பார்வையிட்டுள்ளதா போன்ற பயன்மிக்க தகவல்களை இணையதள பதிப்பாளர் அறிய இந்த குக்கிகள் உதவுகின்றன. நீங்கள் மறுபடியும் ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு வரும்போது நீங்கள் சென்றமுறை வந்தபோது விட்டுச்செல்லப்பட்ட குக்கி இருக்கிறதா என்று பார்ப்பதன் மூலம் இத்தகவலை பெறமுடியும்.

இது தொடர்பான ஆய்வும் புள்ளிவிபர சேகரிப்பும் செய்கிற ரெட்ஷெரிஃப் என்கிற ஒரு சுயேச்சையன நிறுவனம் எங்கள் இணையதளத்தில் உள்ள குக்கிகளையும் குறியீடுகளையும் கொண்டு எங்கள் சார்பாக உங்கள் தனிநபர் தகவல்கள் அல்லாத பிற புள்ளிவிபரங்களை சேகரிக்கிறது. இணையதள பக்கங்கள் பார்வையிடப்பட்டது, குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் எவ்வளவு நேரம் பார்க்கப்பட்டது, பார்வையாளரின் திரை அமைப்புநிலை பிற பொதுவான தகவல்கள் ஆகிய தனிநபர் தகவல் அல்லாத பிற புள்ளிவிபரங்களை பெறவே குக்கிகள் மற்றும் குறியீடுகள் ஆகிய இரண்டும் பயன்படுகின்றன. இந்த தகவலையும், இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பிற குக்கிகளினால் பெறப்பட்ட தகவலையும் கொண்டு உங்களுக்கு வழங்கும் சேவையை மேம்படுத்த பிபிசி பயன்படுத்துகிறது. நீங்கள் ரெட்ஷெரிஃப் குக்கியை நிராகரிக்க விரும்பினால் 7ஆம் புள்ளியில் தரப்பட்டுள்ள செயல்முறையை பின்பற்றலாம். இணையதள குறியீடுகளை நிராகரிக்க வேண்டுமாயின் நீங்கள் privacy@redsheriff.com என்கிற முகவரிக்கு நேரடியாக எழுதி கேட்கவேண்டும். அந்தரங்கம் பேணல் குறித்த ரெட்ஷெரிஃப் நிறுவனத்தின் கொள்கை பற்றி கூடுதல் தகவல்கள் கிடைக்கக்கூடிய (பிபிசி அல்லாத) இணையதளம்:


3. குக்கி என்றால் என்ன?

நீங்கள் ஒரு இணையதளத்திற்குள் நுழையும்போது உங்கள் கணினியில் தானாகவே குக்கி ஒன்று இறங்கிவிடும். குக்கிகள் என்பன எழுத்து கோப்புகள் ஆகும். உங்கள் கணினியை எமது செர்வர்கள் அடையாளம் கண்டுகொள்ள இவை வகைசெய்கின்றன. பார்வையாளர் யார் என்கிற தகவலை குக்கிகளால் பெற இயலாது, பயன்படுத்தப்படும் கணினியை மட்டுமே அதனால் அடையாளம் காணமுடியும். தங்களுடைய இணையதளத்திற்கு வருகின்ற பார்வையாளர் எண்ணிக்கையை அளப்பதற்காக பல்வேறு இணையதளங்கள் இவ்வாறான குக்கிகளை பயன்படுத்துகின்றன.

ஒரு கணினி இணையதளத்தின் எந்தெந்த பகுதிக்கு சென்றுள்ளது என்பதை பதிவுசெய்வது மட்டுமல்லாது எவ்வளவு நேரம் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் செலவிடப்பட்டுள்ளது என்பதையும் குக்கிகள் கணக்கிடும். இணைய பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினி அனைத்து குக்கிகளையும் ஏற்கிறார்போல கணினியை நிலைப்படுத்தமுடியும், குக்கி ஒன்று உள்ளே வரும்போது எச்சரிக்குமாறு செய்யலாம், மாறாக எப்போதும் எல்லா குக்கிகளையும் நிராகரிக்குமாறும் நிலைப்படுத்தலாம். எல்லாவற்றையும் நிராகரித்தால் சில சிறப்பு சேவைகளை பெறமுடியாதுபோகும்.

குறிப்பு: குக்கிகளை நிராகரிக்குமாறு நீங்கள் கணினியை நிலைப்படுத்தாத பட்சத்திலும் உங்களை பற்றிய தகவலை தராமலேயே எங்கள் இணையதளத்தில் நீங்கள் வலம்வர முடியும். ஆனால் bbc.co.ukயின் சேவைகளுக்காக பதியும் பட்சத்தில் நீங்கள் உங்களை பற்றிய தனிநபர் தகவல்களை தரத்தான் வேண்டும்.

4.சேகரிக்கப்பட்ட தனிநபர் தகவல்களின் சேமிப்பு மற்றும் பயன்பாட்டு முறை

தனிநபர் தகவல் எவற்றையாவது நீங்கள் bbc.co.ukவுக்கு வழங்கும்போது ( உதாரணமாக போட்டிகளில் பங்கு பெறுவதற்காகவோ, இணையதள உறுப்பினராகுவதற்காகவோ) அந்த தகவலை நாங்கள் எவ்விதத்தில் பயன்படுத்தவேண்டும் என்கிற சட்டரீதியிலான கடப்பாடுகள் எமக்கு இருக்கின்றன. முறைப்படித்தான் நாங்கள் தனிநபர் தகவலை பெறவேண்டும், அதாவது, அத்தகவலை நாங்கள் எப்படி பயன்படுத்துவோம் என்பதை உங்களுக்கு நாங்கள் விளக்கவேண்டும், மேலும் அத்தகவல்கள் மற்றவருக்கு தரப்படுமா என்பதையும் நாங்கள் உங்களிடம் தெரியப்படுத்தவேண்டும். (தனிநபர் தகவல்களை சில பக்கங்கள் ஏன் கோருகின்றன என்பதை அந்தந்த பக்கங்களில் தரப்பட்டுள்ள விளக்கத்தை படித்து தெரிந்துகொள்ளவும்). பொதுவாக, பிபிசிக்கு நீங்கள் கொடுக்கின்ற தகவல்கள் பிபிசிக்குள்ளாகவும் அதன் சார்பாக சேவை வழங்குபவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும். உங்களது அனுமதியை முன்கூட்டியே பெறாமல் இத்தகவல்கள் பிறருக்கு ஒருபோதும் வழங்கப்படமாட்டாது. சட்டம் எங்களை அத்தகவல்களை வழங்கச்சொல்லி கோரும் பட்சத்திலும் அதற்காக அனுமதி வழங்கும் பட்சத்திலும்தான் நாங்கள் தனிநபர் தகவல்களை உங்களது அனுமதியின்றி வெளியில் கொடுப்போம். அதேபோல பிபிசி இணையதளத்தில் எங்கேனும் முறைதவறிய மோசமான விஷயங்களை நீங்கள் பதிந்தாலும் அல்லது அவற்றை நீங்கள் அனுப்பினாலும் அல்லது பிபிசி தளத்திற்கு தொல்லை தரும் விதமாக எவ்வித காரியத்தில் நீங்கள் ஈடுபட்டாலும், பிபிசி அதை மிக கடுமையாக அணுகும். தொல்லைகள் தொடர்ந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்காக உங்களை பற்றி நாங்கள் பெற்றுள்ள தகவல்களை பிபிசி பயன்படுத்திக்கொள்ளும். உங்களது நிறுவனம், பள்ளி அல்லது மின் அஞ்சல் சேவை வழங்குபவரிடம் தொடர்புகொண்டு நீங்கள் அனுப்பிய விஷயம் பற்றியோ இது தொடர்பான உங்களது நடத்தை பற்றியோ தெரிவிக்கப்படுவதும் இதில் அடங்கும்.

நீங்கள் வேண்டிய எங்களது சேவையை பயன்படுத்தும் காலம் வரை உங்களைப்பற்றிய தனிநபர் தகவல்களை நாங்கள் எங்களது தகவல் தரவில் வைத்திருப்போம். இந்த நோக்கம் நிறைவுபெறும் பட்சத்தில் அத்தகவலை நாங்கள் அகற்றிவிடுவோம். பிபிசி இணையதள உறுப்பினராயிருத்தலுக்காக நீங்கள் தனிநபர் தகவல் தந்துள்ள பட்சத்தில் நீங்கள் உறுப்பினர் பதிவை ரத்து செய்யும் வரையில் தனிநபர் தகவலை நாங்கள் பெற்றிருப்போம். Connector போன்ற சமூக நல தகவல் சேவைக்கு பயன்படும் என்பதற்காக ஒரு ஆறு மாத காலத்திற்கு நீங்கள் அனுப்பிய செய்தி தொடர்பான தகவல்களை (அனுப்பட்ட செய்தி, உறுப்பினர் பெயர், செய்தி வந்த நேரம் தேதி உள்ளிட்ட தகவல்களை) (messaging transcript data) பிபிசி பாதுகாப்பு காரணங்களுக்காக வைத்திருக்கலாம். பிபிசி இணையதளத்தில் பதிவேட்டில் உள்ள உறுபினர் என்று ஆகாமல் இணையதள சேவைகளை (உதாரணமாக வாசகர் போட்டி போன்ற) ஒருவர் பயன்படுத்துகிற பட்சத்தில் அவரைப்பற்றிய தகவல்கள் சேவை தடையின்றி பயன்படுத்தப்படுவதற்கு தேவையான காலம் மட்டும்தான் பிபிசி பெற்றிருக்கும். எம்மிடம் வழங்கப்பட்ட அனைத்து விதமான தனிநபர் தகவலும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு தகவல் பாதுகாப்பு சட்டம் 1998ன் பிரகாரம் அவை கையாளப்படுகின்றனவா என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

நீங்கள் வழங்குகிற தகவலை கொண்டு பிபிசி உங்களை “சேவை நிர்வாக நோக்கத்திற்காக” தொடர்புகொள்ளலாம் என்று bbc.co.uk தளம் ஒன்று தெரிவிக்கும் என்றால் நீங்கள் பதிந்துகொண்ட சேவை தொடர்பான பல்வேறு காரணங்களுக்காக பிபிசி உங்களை தொடர்புகொள்ளலாம் என்பது பொருள். உதாரணமாக, நீங்கள் ரகசியச் சொல்லை மறந்துவிட்டால் அதை உங்களுக்கு நினைவூட்டுவதற்காக நாங்கள் உங்களை தொடர்புகொள்ளலாம், நீங்கள் பயன்படுத்தும் சேவை பராமரிப்பு பணிகளுக்கான இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துவதற்காக தொடபர்புகொள்ளலாம். ஆனால் எமது சேவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தோ, புதிய சேவைகள் குறித்தோ விளம்பரம் செய்வதற்காக நாங்கள் உங்களை தொடர்புகொள்ள மாட்டோம். இது போன்ற காரணங்களுக்காக தொடர்புகொள்ளலாம் என்று சேவைக்கு பதியும் போதே நீங்கள் முன் அனுமதி வழங்கியிருக்கும் பட்சத்திலும், அல்லது இதுபோன்ற விளம்பர தகவலை பெறுவதற்காகவே நீங்கள் தனியாக பதிந்திருக்கும் பட்சத்திலும்தான் நாங்கள் உங்களை அந்த நோக்கில் தொடர்புகொள்வோம்.

5. உங்களைப் பற்றி நீங்கள் தந்த தகவல்களை எம்மிடம் இருந்து நீங்கள் அறியமுடிவது

பிபிசி பெற்றுள்ள உங்களைப் பற்றிய தனிநபர் தகவலின் நகல் ஒன்றை வேண்டிப்பெறவும் அதில் உள்ள பிழைகளை திருத்தச்செய்யவும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. (இத்தகவலை உங்களுக்கு அனுப்ப £10 நாங்கள் வசூலிக்கிறோம்.) நீங்கல் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
The Data Protection Officer, Room 315, Brock House, 19 Langham Street, London, W1A 1AA (மின்அஞ்சல்: dpa.officer@bbc.co.uk)

6. பதினாறு அல்லது குறைவான வயதுடைய பயன்பாட்டாளர்கள்

பதினாறு அல்லது அதற்கு குறைவான வயதுடையவர்கள் பெற்றோர்/ பொறுப்பானவரிடம் முன்அனுமதி பெற்ற பிறகே தனிநபர் தகவலை பிபிசியிடம் கொடுக்கவும். இந்த முன்அனுமதி இல்லாதவர்கள் தனிநபர் தகவல்களை எங்களுக்கு வழங்கக்கூடாது.

7. உங்களது குக்கிகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவது எப்படி?

நீங்கள் நெட்ஸ்கேப் 6.0 பயன்படுத்தினால்:
அதன் Task Barல்

1. முதலில் Editடை க்ளிக் செய்யவும், பிறகு
2. Preferencesஸை க்ளிக் செய்யவும்
3. Advancedடை க்ளிக் செய்யவும்
4. Cookiesஸை க்ளிக் செய்யவும்

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6.0 பயன்படுத்தினால்:

1. முதலில் Toolsசை தெரிவுசெய்யவும்
2. Internet Options
3. Privacy Tabபை க்ளிக் செய்யவும்
4. Custom Levelலை க்ளிக் செய்யவும்
5. ‘Advanced’ பித்தானை க்ளிக் செய்யவும்
6. ‘Override automatic cookie handling’என்ற கட்டத்தில்
குறியிடவும். பிறகு Accept, Block, Prompt என்பனவற்றில்
வேண்டியதை தெரிவுசெய்யவும்.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 5.0 அல்லது 5.5 பயன்படுத்தினால்:

1. முதலில் Toolsசை தெரிவுசெய்யவும்
2. Internet Options
3. Security Tabபை க்ளிக் செய்யவும்
4. Custom Levelலை க்ளிக் செய்யவும்
5. ஆறாவது புள்ளிக்கு இறங்கிவந்து எப்படி குக்கிகள்
கையாளப்படுகின்றன என்பதை பார்த்து Accept, Disable,
Prompt என்பனவற்றில் வேண்டியதை தெரிவுசெய்யவும்.

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 4.0 பயன்படுத்தினால்:

1. Viewவை தெரிவுசெய்யவும், பிறகு
2. Internet Options
3. Advanced Tabபை க்ளிக் செய்யவும்
4. Securityக்கு கீழே தெரியும் மஞ்சள் நிற ஆச்சர்யக்குரிக்கு இறங்கிச்
சென்று குக்கிகளை ஒழுங்குசெய்யும் விதமாக வேண்டியதை
தெரிவுசெய்யவும்.

8. நீங்கள் பார்த்த பக்கங்களில் எவையெல்லாம் குக்கிகளை பயன்படுத்துகின்றன என்று நீங்கள் அறிந்து கொள்வது எப்படி?

நீங்கள் நெட்ஸ்கேப் 6.0 பயன்படுத்தினால்:
அதன் Task Barல்

1. முதலில் Editடை க்ளிக் செய்யவும், பிறகு
2. Preferences
3. Advancedடை க்ளிக் செய்யவும்
4. Coookiesஸை க்ளிக் செய்யவும்
5. View Cookies பித்தானை க்ளிக் செய்யவும்

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6.0 அல்லது 5.0 பயன்படுத்தினால்:

1. முதலில் Toolsசை தெரிவுசெய்யவும்
2. Internet Options
3. General Tabபை க்ளிக் செய்யவும்
4. Settingsசை க்ளிக் செய்யவும்
5. View Files

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 4.0 பயன்படுத்தினால்:
உங்கள் Task Barல்

1. Viewவை தெரிவுசெய்யவும், பிறகு
2. Internet Options
3. General Tabக்கு கீழே பை
4. Settingsஸை க்ளிக் செய்யவும்
5. Veiw Files

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 3.0 பயன்படுத்தினால்:
உங்கள் Task Barல்

1. Veiwவை க்ளிக் செய்யவும்
2. Options
3. Advanced
4. Veiw Files

நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டர் 4.0:

நெட்ஸ்கேப் செயலி எல்லா குக்கிகளையும் ஒரே கோப்பாக மாற்றி உங்கள் கணினியின் ஹார்ட் ட்ரைவில் பதிந்துவிடுகிறது. Cookies.txt என்று அழைக்கப்படும் இந்த கோப்பை நீங்கள் கண்டெடுக்கவேண்டும்.

9. உங்களது குக்கி குறியீட்டை கண்டறிவது எப்படி?

ஒரு குக்கியை திறக்க அதன் மீது க்ளிக் செய்தால் போதும். உள்ளே எழுத்தும் எண்ணும் கலந்த ஒரு குட்டையான குறியீடு தெரியும். அதில் தெரிகிற எண்கள்தான் உங்களது கணினியை குக்கியை வழங்கிய செர்வருக்கு அடையாளம் காட்டும்

British Broadcasting Corporation ©2001 -2004
Broadcasting House,
Portland Place,
London,
W1A 1AA

 
 
 
இவற்றையும் காண்க
 
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள