http://www.worldservice.com/tamil

04 ஜூன், 2008 - பிரசுர நேரம் 10:39 ஜிஎம்டி

BBCTAMIL.COM இணையதளத்தை RSS செய்தி வழங்கல் மூலமாக பாருங்கள்

பிபிசி உலக சேவையானது தற்போது தன்னுடைய மொழிச் சேவைகளில் பெரும்பான்மையானவற்றில் RSS செய்தி வழங்கல் சேவையைக் கொண்டுள்ளது. BBCTAMIL.COMமிலும் இந்த வசதி உள்ளது

RSS செய்தி வழங்கல்கள் என்றால் என்ன?
BBCTAMIL.COMமிலிருந்து செய்திகள் மற்றும் விபரங்களை நீங்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ள RSS செய்தி வழங்கல் சேவை என்பது ஒரு சுலபமான வழியாகும்.

புதிய செய்திகளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் BBCTAMIL.COM இணையதளத்தில் சேர்க்கப்படும் போதெல்லாம் RSS செய்தி வழங்கல் சேவையும் அப்புதிய செய்திகளை உங்கள் RSS News Reader செயலியில் காட்டும். செய்தியின் தலைப்பு, சாராம்சம் ஆகியவற்றைக் நீங்கள் காணலாம். முழு விபரங்களைக் காட்டும் செய்திப் பக்கத்துக்கு உங்களை அழைத்து செல்லும் இணைப்பும் அதில் இருக்கும்.

உதவிக்கும் கூடுதல் விபரங்களுக்கும் இங்கே சொடுக்கவும்.

கீழே தரப்பட்டுள்ள பட்டியலிலிருந்து BBCTAMIL.COMமில் உங்களுக்கு வேண்டுமான RSS செய்தி வழங்கலைத் தெரிவுசெய்துகொள்ளுங்கள்: தயவுசெய்து கவனிக்க: RSS செய்தி வழங்கல் பொத்தானை சொடுக்கினால், ஒரு rdf கோப்பினை பதிவிறக்கம் செய்யச் சொல்லி கேட்கும்.



உதவி

BBCTAMIL.COMமில் உள்ள RSS செய்தி வழங்கலைப் பெறுவது எப்படி?
RSS News Reader செயலி ஒன்றைப் பெறுவது எப்படி?
BBCTAMIL.COMமில் உள்ள RSS செய்தி வழங்கலை உங்கள் இணையதளத்தில் பயன்படுத்துதல்


BBCTAMIL.COMமில் உள்ள RSS செய்தி வழங்கலைப் பெறுவது எப்படி?

RSS News Reader என்ற செயலி ஒன்றை நீங்கள் பெறவேண்டும். இந்தச் செயலியானது நீங்கள் தேர்வுசெய்த இணையதளங்களிலிருந்து செய்திகளையும் விபரங்களையும் RSS செய்தி வழங்கல் மூலம் உங்களுக்குக் காட்டும்.

RSS செய்தி வழங்கலை பல்வேறு வழிகளில் நீங்கள் பெறலாம். அவற்றில் பின்வரும் வழிகளும் அடங்கும்.

குறிப்பு: புதிய RSS News Reader செயலிகளில் நீங்கள் பிபிசி இணைய தளங்களைப் பார்க்கும்போது, பிபிசியின் RSS செய்தி வழங்கலை நீங்கள் உங்கள் செயலியில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதை தெரிவிக்கும்.


RSS News Reader செயலி ஒன்றைப் பெறுவது எப்படி?

RSS News Reader செயலிகளில் பலவகை இருக்கிறது. இணையத்தில் தேடிப்பார்ப்பதன் மூலம் இதுபற்றிய தகவல்களை நீங்கள் அறிவீர்கள். பொதுவாக இச்செயலிகளை இலவசமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

சில RSS News Reader செயலிகள் சில மொழி எழுத்துகளை ஒழுங்காகக் காட்டாது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.


BBCTAMIL.COMமில் உள்ள RSS செய்தி வழங்கலை உங்கள் இணையதளத்தில் பயன்படுத்துதல்

BBCTAMIL.COMமில் உள்ள RSS செய்தி வழங்கலை வேறொரு இணையதளத்தின் ஒரு பகுதியாக நீங்கள் பயன்படுத்துவதினை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஆனால் எம்முடைய

நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு