| உதவி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கணினியில் தமிழோசை கேட்பதற்கு வகைசெய்யும் ஒலிச் செயலியை பெறுவது எப்படி? தமிழோசை நிகழ்ச்சிகளை கேட்க உங்கள் கணினி ரியல் ப்ளேயர் (Real Player) என்ற ஒலிச் செயலியை பெற்றிருத்தல் அவசியம். இந்த செயலியின் அடிப்படை அம்ச வடிவத்தை நீங்கள் இலவசமாகவே உங்கள் கணினிக்குள் இறக்கிக்கொள்ளலாம். அதற்கு பின்வரும் எளிய செயல்முறையை பின்பற்றவும். 1.மேலேயுள்ள Linkகை க்ளிக் செய்தால் உங்களது தனிநபர் தகவல்களை கேட்கும் படிவம் ஒன்றுக்கு நீங்கள் கொண்டுசெல்லப்படுவீர்கள். அந்தப் படிவத்தை நிரப்பி, அப்பக்கத்தின் அடியில் உள்ள பித்தானை க்ளிக் செய்யவும். 2.கணினி தெரிவிக்கும் சமயத்தில் save to disk என்பதை தெரிவுசெய்து, செயலியின் Installation Programஐ ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு சேமிக்கவும். 3.முழுமையாக இறங்கிய பிறகு Install செய்யலாமா என்று கணினி கேட்கும். அப்போது Yes என்பதை தெரிவுசெய்தால் உங்கள் கணினிக்குள் Install ஆகிவிடும் செயலி Install ஆகிவிட்ட பிறகு எமது இணையதளத்தில் உள்ள ஒலிக்கோப்புக்கான Linkகை க்ளிக் செய்து நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்கலாம். பிறகும் கூட ஒலியை கேட்பதில் உங்களுக்கு பிரச்சினை எழுந்தால், help@real.com என்கிற மின் அஞ்சல் விலாசத்தை தொடர்புகொண்டு செயலியில் இருக்கக்கூடிய தொழில்நுட்ப பிரச்சினைகள் தொடர்பாக உதவி பெறலாம். கூடுதல் தகவல்கள் கிடைக்கும் இடம்: |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||