| எம்மைப் பற்றி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையான தமிழோசை அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறது. 1941 மே மாதம் 3ஆம் தேதி தமிழோசை தொடங்கியது.
வாரம் ஒரு நாள் வந்து கொண்டிருந்த எமது நிகழ்ச்சி, எண்பதுகளின் தொடக்கத்தில் வாரம் ஐந்து முறை என உருமாறி, எண்பதுகளின் இறுதியில் தினசரி நிகழ்ச்சியாக முன்னேற்றம் கண்டது. தமிழகம் (தென்னிந்தியா), இலங்கை ஆகிய இடங்களில் எமது நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா என கடல் கடந்து வாழும் தமிழர்கள் எமது நிகழ்ச்சியை இந்த இணையதளம் மற்றும் பல்வேறு மறுஒலிபரப்புகள் மூலமாக கேட்டுவருகின்றனர். |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||