கைத்தொலைபேசி வடிவ இணையத் தரவுகளுக்கு பிபிசி எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லை. அதேசமயம் உங்களின் தொலைபேசி சேவையாளருக்கு நீங்கள் கட்டணம் செலுத்தவேண்டிவரலாம். நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் கால அளவு அல்லது இணையத்திலிருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்த தரவின் அளவைப் பொறுத்து கைத்தொலைபேசி சேவையாளர்கள் கட்டணம் வசூலிக்கலாம்.
உதாரணமாக, ஒரு மெகாபைட் அளவு தகவல்களை நீங்கள் இணையத்தின் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு கைத்தொலைபேசி சேவையாளர் £2 கட்டணம் வசூலிப்பதாக வைத்துக்கொண்டால், பிபிசியின் செய்திப் பக்கங்கள் மூன்றை நீங்கள் படிப்பதற்கு ஏறத்தாழ ஒரு 1p செலவாகும். உங்கள் கைத்தொலைபேசி சேவையாளர் வசூலிக்கும் சரியான கட்டணம் என்ன என்பதை நீங்கள் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
அதேசமயம், கைத்தொலைபேசியில் இணைய பயன்பாட்டுக்கு விதிக்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சில வழிகள் இருக்கின்றன:
இணையப் பயன்பாட்டுக்கு உகந்த கட்டண திட்டத்திற்கு மாறுங்கள்
மாதந்தமாக அல்லது பயன்படுத்தும் நாட்களுக்கு மட்டுமாக குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்திவிட்டால் குறிப்பிட்ட அளவில் இணையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வகையான திட்டங்களில் சேர்ந்தால், நீங்கள் கைத்தொலைபேசியில் அதிகமாக இணையத்தைப் பாவிப்பவராக இருக்கும் பட்சத்தில், உங்கள் மாதந்த செலவு குறையும். கூடுதல் விபரங்களுக்கு உங்களுடைய கைத்தொலைபேசி சேவை வழங்குநரைத் தொடர்புகொள்ளுங்கள்.
Wi-Fi எனப்படும் கம்பியற்ற இணைய சேவையை பயன்படுத்துங்கள்
தற்போது தயாரிக்கப்படும் கைத்தொலைபேசிகள் பலவற்றில் இந்த வசதி இருக்கிறது. உங்கள் வீட்டிலோ அல்லது வெளியிலோ இருக்கும் கம்பியற்ற அகண்ட அலைக்கற்றை இணைய சேவையை பயன்படுத்தி பிபிசிதமிழின் கைத்தொலைபேசி வடிவ இணையதளத்துக்கு நீங்கள் வந்தால் உங்களது தரவுக் கட்டணங்கள் குறையும். உங்கள் கைத்தொலைபேசியில் Wi-Fi வசதி இருக்கிறதா என்று உங்களுக்கு உறுதியாக தெரியாவிட்டால், உங்கள் அதன் தயாரிப்பாளர் அல்லது கைத்தொலைபேசி சேவை வழங்குநரை தொடர்புகொள்ளவும்.
புளூடூத் பயன்படுத்துங்கள்
பிபிசி கைத்தொலைபேசி இணையத்தில் உள்ள சில காணொளிக் கீற்றுகள் பகிர்தல் தடுக்கப்படாதனை. எனவே ஒரு கைத்தொலைபேசியிலிருந்து மற்ற கைத்தொலைபேசிகளுக்கு அவற்றை புளூடூத் வழியாக அனுப்ப முடியும். ஆகவே அவ்வழியாக உங்கள் நண்பர்களுடன் அவற்றை பகிர்ந்துகொள்வதன் மூலம் செலவைக் குறைக்கலாம்.








