நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.5 எம்பி)

காவிரியில் உபரி நீரை சேமித்து வைக்க என்ன செய்ய வேண்டும்?

30 ஜூலை 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:38 ஜிஎம்டி

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால், தமிழகத்தில் காவிரி நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஆனால் அதை சேமித்து வைப்பதில் இருக்கும் பிரச்சினைகள் காரணமாக, உபரி நீரை சேமிக்க இயலாமல் அவை கடலில் கலக்கிறது எனும் கவலைகள் தமிழக விவசாயிகளிடம் அதிகரித்து வருகின்றன.

அதேபோல அதை சேமித்து வைக்க கூடுதல் நடவடிக்கைகள் தேவை எனும் குரல்களும் வலுத்து வருகின்றன.

இதிலுள்ள பிரச்சினைகள் குறித்து, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காவிரிப் பாசனப் பகுதியில், தமிழக பொதுப்பணித் துறையில், மேற்பார்வைப் பொறியாளராக இருந்த நடராஜன் அவர்களிடம் கருத்துக் கேட்டார் சிவராமகிருஷ்ணன்.