BBC navigation

சவுக்கு இணையதளத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 28 பிப்ரவரி, 2014 - 19:31 ஜிஎம்டி
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

சர்ச்சைக்குரிய சவுக்கு இணையதளத்தை பத்து நாட்களுக்குள் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சவுக்கு இணையதளத்தில் தன்னைப்பற்றி அவதூறான செய்திகள் வெளியிடப்பட்டதாக புகார் கூறி சவுக்கு இணையதளத்தை எதிர்த்து சென்னை வழக்கறிஞர் மஹாலக்ஷ்மி தாக்கல் செய்திருந்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளியன்று பிறப்பித்திருக்கிறது.

இந்த உத்தரவுக்கு காரணமான வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து இந்த வழக்கை தொடுத்தவரான வழக்கறிஞர் மஹாலக்ஷ்மி சார்பில் வாதாடிய அவரது வழக்கறிஞர் சங்கரசுப்பு பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

சவுக்கு இணையதளத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சைக்குரிய சவுக்கு இணையதளத்தை பத்து நாட்களுக்குள் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இன்றைய உத்தரவுக்கு காரணமான வழக்கின் பின்னணி என்ன என்பது குறித்து இந்த வழக்கை தொடுத்தவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சங்கர சுப்புவின் செவ்வி

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

சவுக்கு இணையதள மூடல்: உச்சநீதிமன்றத்தை நாடவிருக்கிறோம்

சவுக்கு இணையதளத்தை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் இன்றைய உத்தரவுக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக, சவுக்கு இணையதள வடிவமைப்பாளர் முருகையன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கு குறித்தும், தமது மனுதாரரான முருகையன் குறித்தும், சவுக்கு இணையதளம் குறித்தும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

“சவுக்கு இணையதள மூடல்: உச்சநீதிமன்றத்தை நாடவிருக்கிறோம்”

சர்ச்சைக்குரிய சவுக்கு இணையதளத்தை மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் இன்றைய உத்தரவுக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக, சவுக்கு இணையதள வடிவமைப்பாளரின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.