BBC navigation

இந்தியக் கார்கள் விபத்து பாதுகாப்பு சோதனையில் தோல்வி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஜனவரி, 2014 - 10:30 ஜிஎம்டி

உலகிலேயே விலை குறைவான டாட்டா நானோ கார்

இந்தியாவில் பிரபலமாக உள்ள சில கார் வகைகள் விபத்து பாதுகாப்பு பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளன.

வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பாக பரிசோதிக்கும் சுயாதீன நிறுவனமொன்றின் சோதனையிலேயே இந்தக் கார்கள் பாதுகாப்பற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

ஐரோப்பாவிலும் வட- அமெரிக்காவிலும் 20 ஆண்டுகளுக்கு முன்னர் வைத்திருந்த வாகன பாதுகாப்பு நடைமுறைகளையே தற்போது இந்தியாவிலுள்ள 5 சிறிய ரக கார்கள் கொண்டிருப்பதாக க்ளோபல் என்சிஏபி (Global NCAP) என்ற நிறுவனம் கண்டறிந்துள்ளது.

உலகின் மிக விலைகுறைந்த காரான டாட்டா நானோ- வும் இந்த பாதுகாப்பு பரிசோதனையில் தோல்வி கண்டுள்ளது.

இதுதவிர, ஃபோர்ட், வோல்க்ஸ்வேகன் மற்றும் ஹையுண்டாய் போன்ற உலக நிறுவனங்கள் இந்திய சந்தைக்காக தயாரித்து விற்கும் கார் ரகங்களும் கூட இந்த சோதனையில் வெற்றிபெறவில்லை.

இந்தக் கார்கள் எல்லாம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றவை.

உள்ளூர் சந்தையில் விலை குறைந்த கார்களுக்கு ஏற்பட்டுள்ள நல்ல கிராக்கி காரணமாக, காற்றுப் பைகள் (ஏர் பேக்) போன்ற விபத்து பாதுகாப்பு கருவிகளை நீக்கிவிட்டுத் தான் இந்தக் கார்கள் குறைந்த விலையில் சந்தைக்கு வருகின்றன.

உலகில் ஏனைய நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகளவு வீதி விபத்துக்கள் தினசரி நடக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.