நரேந்திரமோடி கூட்டத்தில் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி

  • 27 அக்டோபர் 2013

இந்தியாவின் பிஹார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவில் நரேந்திரமோடி அவர்களின் கூட்டம் ஒன்றில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்ததில் குறைந்தபட்சம் 4 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இந்த தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள்.

வெடிக்காத பல குண்டுகளும் அங்கு மீட்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியும், இந்து தேசியவாத கட்சியுமான பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரான நரேந்திர மோடி அவர்களின் உரையைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கானோர் நகர மையத்தில் கூடியிருந்தபோது இந்த குண்டுகள் வெடித்தன.