BBC navigation

இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.4 சதவீதமாக குறைந்தது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 ஆகஸ்ட், 2013 - 14:26 ஜிஎம்டி
இந்திய ரூபாய்

இந்திய ரூபாய்

இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் 4.4 சதவீத வளர்ச்சி கண்டுள்ளதாக அரசாங்கம் சற்று முன்னர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தொடர்ந்து மூன்றாவது காலாண்டு பகுதியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து வருவதை இது குறிக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7 சதவீத வளர்ச்சி கண்டுவந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தியோடு தொடர்புடைய இணைப்புகள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.