BBC navigation

இன்ஃபோசிஸ் பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகின்றன

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஜூலை, 2013 - 07:20 ஜிஎம்டி
நாராயண மூர்த்தியின் வருகையால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

நாராயண மூர்த்தியின் வருகையால் முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

இந்தியாவின் இரண்டாவது பெரிய கணினி மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸின் பங்குகள் 12 வீதத்தால் அதிகரித்துள்ளன.

இதன் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர வருமானம் 23.8 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.7 வீத வளர்ச்சியாகும்.

இதன்மூலம் இந்த நிறுவனம் இந்த நிதியாண்டில் எதிர்பார்த்திருந்த 6-10 வீத வருமான வளர்ச்சி வேகத்தை தக்கவைத்திருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இன்ஃபோசிஸ் அதன் வளர்ச்சி வீதத்தை தக்கவைத்துக்கொள்ள கடந்த சில ஆண்டுகளாக பெரும் சிரமப்பட்டது.

கடந்த மாதமே, இன்ஃபோசிஸ் இணை-நிறுவனர் நாராயண மூர்த்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார்.

66 வயதான நாராயண மூர்த்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வுபெற்றிருந்தார்.

கடந்த பல மாதங்களாக வளர்ச்சி வேகத்தில் பின்னடைவை சந்தித்துவந்த இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மீள்வருகைக்குப் பின்னர் மீண்டும் நல்ல வளர்ச்சியைக் காட்டும் என்று முதலீட்டாளர்கள் நம்பி இறங்கியுள்ளதாக பொருளாதார அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.