படங்களில்: புத்த கயா குண்டுவெடிப்பு

8 ஜூலை 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:41 ஜிஎம்டி

புத்த மதத்தவரின் மிகப் புனித இடமான புத்த கயாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த ஒரு படத் தொகுப்பு.
புத்த காயவில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களில் ஒரு பிக்கு உட்பட இருவர் காயமடைந்தனர். புத்தர் ஞானமடைந்த இடம் இது.
மகாபோதி கோயில் மைதானத்தில் 4 குண்டு வெடிப்புகள் இடம்பெற்றன. யுனேஸ்கோவால் உலக பாரம்பரிய இடமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினர் வெடிக்காத மூன்று குண்டுகளை செயலிழக்கச் செய்துள்ளனர்.
குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் ஆதாரங்களைச் சேகரித்தனர்.
இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆயினும் எந்த அமைப்பும் இது தொடர்பில் பொறுப்பேற்கவில்லை.
குண்டு வெடிப்பில் கோயில் வளாகத்தில் சிறிதளவு சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. வழிபாட்டுக்காக கோயில் திங்கள் மாலை திறக்கப்பட்டுள்ளது. இலங்கை, தாய்லாந்து, பர்மா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கே வருகின்றனர்.
குண்டுத் தாக்குதலுக்கு எதிராக நாட்டின் பிற இடங்களில் கண்டனப் பேரணிகள் நடைபெற்றுள்ளன. கொல்கத்தாவில் புத்த மதத் துறைவிகள் தலைமையில் அமைதி ஆர்பாட்டம் நடைபெற்றது.
போபாலிலும் புத்த மையத்தை சேர்ந்த துறவிகள் ஆர்பாட்டம் நடத்தினர்.