BBC navigation

பிஹார்: ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி முறிந்தது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 ஜூன், 2013 - 10:39 ஜிஎம்டி
நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே கூட்டணி முறிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 19ஆம் தேதி பிஹார் சட்டமன்றத்தில் தனது அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பை கோரும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மாநில ஆளுநர் டி ஒய் பாட்டீலைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நிதிஷ் குமார், சட்டமன்றத்தில் தனது அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதற்கென விசேடக் கூட்டத்தொடர் ஒன்றுக்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

முன்னதாக முதலமைச்சரின் வீட்டில் அவசரக் கூட்டம் ஒன்றை நடத்திய ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் பாஜகவுடன் தாங்கள் கொண்டுவந்த கூட்டணியை முறித்துக்கொள்வதாக அறிவித்திருந்தனர்.

முதல்வர் வீட்டில் நடந்த மாநில அமைச்சர்களின் கூட்டத்தில் பாஜகவினர் கலந்துகொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி செய்வது ஆபத்தான அரசியல் என்றும், சமூகத்தில் ஒரு பிரிவினர் மோடி நாட்டின் தலைவராக வருவதை விரும்பவில்லை என்றும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்கள் தமது சந்திப்பில் நிறைவேற்றிய தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த வருடம் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் பணிக்குழு தலைவராக நரேந்திர மோடி அண்மையில் தெரிவுசெய்யப்பட்டதை அடுத்து, பாஜக ஐக்கிய ஜனதா தளம் இடையிலான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்திருந்தன.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.