ஜாலியன்வாலா பாக் படுகொலைகளை மறக்கக் கூடாது - கேமரன்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 20 பிப்ரவரி, 2013 - 12:38 ஜிஎம்டி
டேவிட் கேமரன்

பிரதமர் டேவிட் கேமரன்

ஜாலியன்வாலா பாக் படுகொலையை மறக்கக் கூடாது என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பூங்காவிற்கு சென்ற டேவிட் கேமரன் அங்குள்ள வருகையாளர் ஏட்டில் இந்தக் கருத்துக்களை எழுதியுள்ளார்.

ஜாலியன்வாலா பாக் செல்லும் முதல் பிரிட்டிஷ் பிரதமர் கேமரனாவார்.

காலனிய ஆட்சி காலத்தின் போது 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதியன்று, ஜாலியன்வாலா பூங்காவில் கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக் கணக்கானோர் மரணமடைந்தனர்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் இருண்ட, ஆனால் முக்கியமான ஒரு நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் பிரிட்டனின் வரலாற்றில் 'மிகவும் அவமானகரமான ஒன்று' என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.

அதே நேரம் இந்தச் சம்பவம் தொடர்பாக பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தும் அவர் மன்னிப்பு கோரவில்லை.

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள கேமரன் சீக்கியர்களின் பொற்கோயிலுக்கும் சென்றுள்ளார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.