பாகிஸ்தானுக்கு ஆக்ரோஷ பதிலடி கொடுங்கள்: இந்திய இராணுவத் தலைவர்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 14 ஜனவரி, 2013 - 10:51 ஜிஎம்டி
ஜெனரல் பிக்ரம் சிங்

ஜெனரல் பிக்ரம் சிங்

தகராற்றுக்குரிய காஷ்மீரில், பாகிஸ்தானிய துருப்பினர் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறு இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார்.

தூண்டிவிடும் விதமாக செயல்படுவோருக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்தியாவுக்கு இருக்கவே செய்கிறது என்று ஜெனரல் பிக்ரம் சிங் தெரிவித்தார்.

காஷ்மீரின் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் பதற்றங்களைத் தணிப்பதற்கும் மேற்கொண்டு மோதல்கள் வராமல் தடுப்பதற்குமான வழிவகைகளை ஆராய்வதற்காக அப்பகுதியிலுள்ள இராணுவத் தளபதிகள் கூடவிருக்கும் நேரத்தில் இராணுவத் தலைவர் பிக்ரம் சிங்கின் கருத்து வந்துள்ளது.

கடந்த வாரம் இப்பகுதியில் நடந்த மோதல்களில் இந்தியச் சிப்பாய்கள் இருவரும் பாகிஸ்தானியச் சிப்பாய்கள் இருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் தொடர்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு முறை யுத்தமிட்டுள்ளன.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.