
'இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஹிந்தி மொழியை பரப்புவதற்கென தனியான பிரிவுகள் உள்ளன'
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீட்டு நிறுவன ஊழியர்கள், வாரத்தில் ஒருநாள் ஹிந்தியில் கையெழுத்திடவேண்டும் என்று சமீபத்தில் வற்புறுத்தப்பட்டதை தமிழ்நாட்டில் பணிபுரியும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து அந்த உத்தரவு இன்னும் நடைமுறைக்கு வராமல் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜூன் மாத இறுதியில் நடைபெற்ற அலுவலக மொழி நடைமுறைப்படுத்துதல் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
'இந்தி திணிப்பு': ஊழியர்கள் எதிர்ப்பு
'இந்தி திணிப்பு': தமிழ்நாடு எல்ஐசி ஊழியர்கள் எதிர்ப்பு
எல்ஐசி நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தென்மண்டல பொதுச் செயலாளர் சுவாமிநாதன்
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
அதன்படி, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென் மண்டல மேலாளர் (மனிதவள மேம்பாடு) அனுப்பிய சுற்றறிக்கையில் அனைத்து ஊழியர்களும் வாரத்தில் ஒரு நாள், குறிப்பாக திங்கட்கிழமைகளில் ஹிந்தியில் கையெழுத்திட வேண்டும், கடிதங்கள் மற்றும் தகவல்களில் ஹிந்தியில் கையெழுத்திட்டு, ஹிந்தி மொழி தொடர்பு அதிகரிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆயுள்காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தென்மண்டல பொதுச் செயலாளர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
இந்த உத்தரவை ஊழியர்கள் ஏற்று நடக்கவேண்டும் என்று ஊழியர்களின் கணினி வாயிலாக வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து பணியாளர்களின் கவனத்திற்கு இந்த பிரச்சனை வந்ததாக கூறும் சுவாமிநாதன், உடனடியாக தமது சங்கமும் ஊழியர்களும் இதை எதிர்த்ததாகவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தங்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் அதிகாரிகள் அமைதி காப்பதாக கூறும் சுவாமிநாதன், இந்தி மொழியை பரப்புவதற்கான பிரிவும், அரசு அதிகாரிகளும் அதற்கான நிதி ஒதுக்கீடும் தொடரும்வரை எதிர்காலத்தில் இத்தகைய கோரிக்கைகள் தொடர்ந்தும் வரலாம் என்றும் கருதுகிறார்.
எனவே,ஹிந்தி மொழியை மத்திய அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் கட்டாயப்படுத்தி திணிப்பது குறித்து பொது விவாதம் நடத்தப்படவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.







