
காலமான ஆண்டோ பீட்டர்
கணினித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவனரும்,கணினித் தமிழ்ச்சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் இன்று(12.07.2012) அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் இயற்கை எய்தினார்.
அவர் தந்தை பெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
உத்தமம் என்ற அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.
மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர்.
இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.
இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு என்று பல்துறையினர் வெளியிட்டுள்ள இரங்கலில் தெரிவித்துள்ளனர்.
தமிழில் கம்ப்யூட்டர் குறித்த விழிப்புணர்வை தமிழர்களிடையே அதிகப்படுத்திய ஒரு முன்னோடியாக ஆண்டோ பீட்டர் பார்க்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.







