bbc.co.uk navigation

சிபிஎம் வரதராஜன் காலமானார்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஏப்ரல், 2012 - 09:56 ஜிஎம்டி
என் வரதராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

என் வரதராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் முன்னாள் தமிழ் மாநிலச் செயலாளருமான என்.வரதராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 81.

அவர் சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வரதராஜன் சிபிஎம்மின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.

மூன்று முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். பழகுவதற்கு இனிமையானவர். தேர்ந்த மேடைப்பேச்சாளர். வரதராஜனின் மறைவிற்குத் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.