மம்தா-மத்திய அரசு மோதல் முற்றுகிறது

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 மார்ச், 2012 - 17:50 ஜிஎம்டி
மம்தா பேனர்ஜி

மம்தா பேனர்ஜி

இந்திய ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் போக்குவரத்துக் கட்டணம் சிறிது உயர்த்தப்பட்டுள்ளதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கட்டண உயர்வை அறிவித்த தனது கட்சியைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் கோரியுள்ளார்.

தினேஷ் திரிவேதிக்குப் பதிலாக தனது கட்சியைச் சேர்ந்த முகுல் ராய் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மம்தா பேனர்ஜி கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மம்தா பேனர்ஜியை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திரணமூல் காங்கிரஸ் கட்சி வெளியேறினால் அதற்கு பதிலாக உத்திரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றுள்ள சமாஜ்வாதிக் கட்சியை மத்திய அரசுக்குள் கொண்டு வரவும் முயற்சிகள் நடப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தான் ராஜினாமா செய்யவில்லை என்றும் தன்னை ராஜினாமா செய்யுமாறு பிரதமரோ தனது கட்சித் தலைவர் மம்தா பேனர்ஜியோ கோரவில்லை என்றும் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறியுள்ளார். அதே நேரம் நாட்டில் தற்போது ரயில்வே அமைச்சர் யார் என்று எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளன.

நாடாளுமன்றம் முக்கிமான பட்ஜெட் அமர்வில் இருக்கும் போது முக்கிய அமைச்சரை மாற்ற வேண்டும் என்று வரும் அழுத்தங்கள் அரசாங்கத்தின் மீதான மதிப்பை மேலும் குலைப்பதாக இருப்பதாக கூறுகிறார் பிடிஐ செய்தி நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் வி எஸ் சந்திரசேகர்.

அவரது செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

"மம்தாவின் மோதல் போக்கு மத்திய அரசின் மதிப்பை குறைக்கும்"

ரயில் கட்டண உயர்வு தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கும் மம்தா பேனர்ஜிக்கும் இடையில் வெடித்திருக்கும் மோதல் போக்கு மத்திய அரசின் மதிப்பை குலைக்கும் என்கிறார் பிடிஐ நிர்வாக ஆசிரியர் சந்திரசேகர்

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.