
கிங் பிஷ்ஷர் விமானங்கள்
தனது விமானங்களின் பயண கால அட்டவணை குறித்து தெளிவான விவரங்களை கிங் பிஷ்ஷர் ஏர்லைன்ஸ் புதன்கிழமைக்குள் அளிக்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பெரும் நஷ்டத்தில் இருக்கும் கிங் பிஷ்ஷரின் பல விமான சேவைகள் ரத்தான நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
தற்போது கிங் பிஷ்ஷர் நிறுவனம் 50 சதவீதத்துக்கும் குறைவான விமான சேவைகளையே இயக்கி வருகிறது. பல டஜன் விமான சேவைகள் சமீப நாட்களாக ரத்து செய்யப்பட்டன் காரணமாக பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்ட கிங் பிஷ்ஷர் நிறுவனம் இதற்கு முன்பும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாகவும், உள்நாட்டில் பிற விமான நிறுவனங்கள் மூலம் வரும் போட்டி காரணமாகவும் கிங் பிஷ்ஷரின் நிலமை மேலும் மோசமடைந்துள்ளது.
முன்னணி மதுபானத் தயாரிப்பாளரான விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான கிங் பிஷ்ஷர் ஏர்லைன்ஸ், வரிமான வரித் துறையினர் தமது சில கணக்குகளை முடக்கியதால்தான் இந்த நெருக்கடி ஏற்பட்டது என்று கூறுகிறது.








