
கூடம்குளம் அணு மின் நிலையம்
அணு மின் நிலையத்தை எதிர்த்து திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், இடிந்தகரை தேவாலய வளாகத்தில் நடைபெற்று வரும் தொடர் உண்ணாவிரதம்தான் ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்துவருகிறது.
ஆனால் அதே இடிந்தகரையின் இன்னொரு பகுதியில் சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கும் குடியிருப்புக்கள், கூடங்குள அணுமின் நிலையத்திற்கு வெகு அருகில் அமைந்திருக்கின்றன என்றும் நாள்தோறும் உயர்ந்துவரும் அணு மின்நிலைய கோபுரங்கள் அம்மக்களை பீதியில் ஆழ்த்தியிருப்பதை காண முடிகிறது என்றும் அங்கு சென்று வந்த எமது செய்தியாளர் டி.என். கோபாலன் கூறுகிறார்.
பீதி என்று மட்டுமல்ல தொழில் ரீதியாகவும் அம்மீனவ மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
''மீன்பிடித்தொழிலுக்கு பாதிப்பேதும் இல்லை, மக்கள் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை'' என அணுமின்நிலைய நிர்வாகத்தினர் தொடர்ந்து கூறிவந்தாலும் நாள்தோறும் பிரச்சினைகளை சந்திக்கும் மீனவர்கள் மற்றும் நாள்தோறும் கோபுரங்களைக்க்கண்டு மிரளும் அம்மக்கள் ஆகியோரின் எதிர்ப்பு அவ்வளவு எளிதில் குறைந்துவிடுமா என்பது கேள்விக்குறியே.
இதனிடையே போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மின் உற்பத்திக்கு தடையாயிருக்கிறார், இந்திய ஒற்றுமைக்கு பங்கமேற்படுத்தும் வகையில் பேசி மக்களை வன்முறைக்குத் தூண்டிவிடுகிறார் என்று கூறி அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்கைது செய்யவேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் தாககல் செய்த் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பால் வசந்தகுமார் மற்றும் தேவதாஸ் அடங்கிய டிவிஷன்பெஞ்ச் தலைமை நீதி இக்பால் கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த அனைத்து வழக்குக்களும் சென்னையிலேயே விசாரிக்கப்பட்வேண்டுமென உத்திரவிட்டிருப்பதாகக்கூறி, சிவகுமாரின் மனுவையும் சென்னக்கு மாற்றி உத்திரவிட்டனர்.








