bbc.co.uk navigation

அமைச்சர் சிதம்பரம் எதிரான சு.சுவாமியின் மனு தள்ளுபடி

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 4 பிப்ரவரி, 2012 - 17:05 ஜிஎம்டி
சுப்ரமணிய சுவாமி

சுப்ரமணிய சுவாமி

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் உள்துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் உட்துறை அமைச்சர் சிதம்பரம் மீதும் குற்றஞ்சாட்டி அவரையும் விசாரிக்க வேண்டும் என்று கோரி சுப்ரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமைச்சர் சிதம்பரம் குற்றம் புரிந்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் தெரிவித்தது.

உட்துறை அமைச்சர் சிதம்பரம்

உட்துறை அமைச்சர் சிதம்பரம்

அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராசா மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுக்களுடன் அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு உள்ளது என்ற அடிப்படையில் அவரையும் குற்றவாளி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதே சுப்ரமணிய சுவாமியின் கோரிக்கை.

அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது நிதியமைச்சருடன் கலந்தாலோசித்துத்தான் தொலைத்தொடர்பு அமைச்சர் முடிவுகளை எடுத்திருப்பார் என்ற அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், அமைச்சர் சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் அவரை விசாரிக்க முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, இந்த தீர்ப்பின் முடிவில் ஊடகங்களிடம் பேசிய சுப்ரமணிய சுவாமி, தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப் போவதாகக் கூறினார்.

தொடர்புடைய விடயங்கள்

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.