bbc.co.uk navigation

லோக்பால் மசோதா: ஹஸாரே அடையாள உண்ணாவிரதம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 11 டிசம்பர், 2011 - 13:28 ஜிஎம்டி
தில்லியில் பொதுமக்கள் முன்னிலையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்.

தில்லியில் பொதுமக்கள் முன்னிலையில் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்

இந்தியாவில் ஊழல் ஒழிப்பு தொடர்பில் போராட்டங்களை நடத்திவரும் முன்னணி ஆர்வலர் அன்னா ஹஸாரே, தில்லியில் ஞாயிறன்று ஒரு-நாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்திய அரசாங்கம் புதிதாக வரைந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள லோக்பால் சட்ட மசோதா, நாட்டில் ஊழலைக் களைய போதுமானதாக இல்லை என்று கூறி அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை செய்கிறார்.

நான்கு மாதங்கள் முன்பு லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி அன்னா ஹஸாரே நடத்திய உண்ணாவிரதம்தான் தேசிய அளவிலான ஒரு போராட்டமாக உருவெடுத்து, ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அரசாங்கத்தின் மீது அழுத்தம் தந்திருந்தது.

அதேநேரம், உண்ணாவிரதம் போராட்டம் என்ற பேரில் ஜனநாயக வழிமுறைகளை சிதைக்க முனைகிறார் என்று ஹஸாரே மீது குற்றச்சாட்டுகளும் எழுந்திருந்தன.

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.