தில்லி நகரமைப்பு: நூறு வருட சரித்திரமும் சவால்களும்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 7 டிசம்பர், 2011 - 13:20 ஜிஎம்டி
 • ஷாஜஹானாபாத் (தில்லி அரசு ஆவணக் கருவூலகம்)
  பிரிட்டிஷ் காலனீய அரசின் தலைமையகமாக தில்லி வருவதற்கு முன்னால் அவ்வூர் ஷாஜஹானாபாத் என்று முகலாயப் பேரரசரின் நினைவால் அழைக்கப்பட்டு வந்தது. அந்த இடத்துக்கு பழைய தில்லி என்று பிரிட்டிஷார் பெயர் வைத்திருந்தனர். அதன் அருகே தாங்கள் நிர்மாணிக்கின்ற புதிய நகரத்துக்கு புது தில்லி என்று பெயர் வைக்க அவர்கள் தீர்மானித்தனர். புது தில்லியை நிர்மாணிக்க ரைஸினா மேட்டுப் பகுதி தெரிவுசெய்யப்பட்டது.
 • மெட்காஃப் ஹவுஸ் (தில்லி அரசு ஆவணக் கருவூலகம்)
  பிரிட்டிஷார் தமது நிர்வாகத் தலைமையகமாக புது தில்லியை நிறுவியவுடன், அந்த ஊரில் சாமானிய மக்களுக்கு பெருமளவில் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்துவது அவர்களது நோக்கமாக இருக்கவில்லை. நிர்வாகப் பணிகளில் உள்ளவர்களுக்கும், அரசு அலுவலகங்களில பணியாற்றுபவர்களுக்கும் குடியிருப்பை அமைப்பதாகவே நோக்கம் இருந்தது. இந்தப் படத்தில் இருப்பது மெட்காஃப் ஹவுஸ். 1835ல் இது கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
 • சாந்த்னி சவுக்(தில்லி அரசு ஆவணக் கருவூலகம்)
  பிட்டிஷார் தில்லுக்கு தலைமையகத்தை மாற்றிபோது அந்நகரின் மொத்த ஜனத்தொகை வெறும் இரண்டரை லட்சம்தான்.
 • 1947ல் அகதிகள் வருகை  (தில்லி அரசு ஆவணக் கருவூலகம்)
  1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்த வேளையில் நாடு இரண்டாகப் பிரிந்தது. அப்போது ஏராளமான அகதிகள் தில்லியில் வந்து குடியேறினர். அதனால் தில்லியின் ஜனத்தொகை திடுதிப்பென்று இரண்டு மடங்காகிப்போனது.
 • குடியமரும் அகதிகள் (தில்லி அரசு ஆவணக் கருவூலகம்)
  ஊருக்குள் வந்த அகதிகளை அரசாங்கம் அதிகம் ஒழுங்கு செய்யாததால், காலியாக இருந்த இடங்களில் எல்லாம் மக்கள் குடியேறினர். ஆனால் 1955ஆம் ஆண்டுக்கு பின்னர் நகரமைப்பு திட்டங்களின் பிரகாரம் மாநகரத்தை உருவாக்க அரசாங்கம் முடிசெய்துகொண்டிருந்தது.
 • தில்லி ரயில் நிலையம்
  சுதந்திர இந்தியாவில் தொடர்ந்தும் ஏராளமான மக்கள் தில்லியில் வந்து குடியேறி வருகிறார்கள்.
 • தில்லிக்கு வந்து குடியேறும் மக்கள்
  முன்பெல்லாம் தில்லிக்கு வருகின்ற மக்களுக்கு அரசாங்கம் குடியிருப்புப் பகுதிகளை அமைத்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் புதிதாக வருபவர்கள், திட்டமிட்டு அமைக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தங்குவதில்லை.
 • பழைய தில்லி
  வேகமாக விரிவடைந்துவரும் நகரத்தை ஒழுங்கமைக்க பல திட்டங்கள் போடப்பட்டன. ஆனால் இத்திட்டங்கள் பல எதிர்காலத் தேவைகளுக்கு ஈடுகொடுத்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
 • தில்லியின் சேரி ஒன்று
  மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், ஏராளமான சேரிகளும் சட்டவிரோத குடியிருப்புகளும் உருவாகிவந்துள்ளன.
 • சேரிக் குடிவாசி ஒருவர்
  பல கனவுகளோடு தில்லிக்கு வரும் மக்கள், தங்களது வாழ்க்கை மேம்படும் என்று நம்பிக்கொண்டு இருந்துவிடுகிறார்ர்கள். ஆனால் ஜனத்தொகைக்கு ஈடுகொடுக்க முடியாமல் நகர நிர்வாகம் திணறுகிறது.
 • குப்பை மேடு
  சுகாதாரமின்மை என்பது தில்லியின் ஏழை மக்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்துவருகிறது.
 • தில்லி
  இந்தியாவில் தாராளமயமாக்கல் கொள்கை வந்த பின்னர் அண்டை மாநிலங்களுக்கு எல்லாம் பரவுகின்ற அளவில் தில்லி பெரிதாகிப்போனது. நோய்டா, குர்காவோன், காஸியாபாத் போன்றவை தேசியத் தலைநகர் நிலப்பரப்பில் சேர்ந்தன.
 • போக்குவரத்து நெரிசல்
  நகரம் விரிவடைந்துகொண்டே போகிறது, ஆனால் அடிப்படை வசதிகள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நகரில் போக்குவரத்து நெரிசலும் சமாளிக்க முடியாமல் உள்ளது.
 • தில்லியில் வெள்ளம்
  பருவ மழை பெய்யும் காலங்களில் நகரம் வெள்ளக்காடாகவும் மாறிப்போய்விடுகிறது.
 • சேரியில் நீர் அருந்தும் இளைஞர்
  மின் இணைப்பு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை எல்லோருக்கும் வழங்குவது மாநகர நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.
 • கொன்னாட் பிளேஸ்
  வேகமாக விரிவடைந்து வருவதால் தில்லியின் எதிர்காலம் குறித்து பலர் அஞ்சுகிறார்கள். ஆனால் உலகின் முக்கியப் பெருநகரமாக திகழ வேண்டும் என்ற ஆசை தில்லிவாசிகளிடையே காணப்படுகிறது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.