
மாயாவதி
மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் மிகப் பெறும் மாநிலமான உத்திரப் பிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரிக்கும் தீர்மானம் அம்மாநில சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்த சில மாதங்களில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநிலத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது. மாநிலத்தை பூர்வாஞ்சல், அவத் பிரதேஷ். புந்தேல்கண்ட் மற்றும் பச்சிம் பிரதேஷ் ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்று மாநில முதல்வர் மாயாவதி சில தினங்களுக்கு முன்தான் அறிவித்திருந்தார்.
மக்களை திசை திருப்புவதற்காக இது போன்ற நடவடிக்கைகளை மாயாவதி எடுப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் மாநில வளர்ச்சி கருதித்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசியல் நோக்கம் இல்லை என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார். மத்திய அரசு இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தால்தான் இந்த முடிவு நடைமுறைக்கு வரும்.
ஆந்திராவில் இருந்து தெலங்கானாவை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போராட்டம் குறி்த்து ஒரு முடிவு எடுக்க முடியாமல் மத்திய அரசு திண்டாடி வருகிறது.
நாட்டின் வேறு சில இடங்களிலும் தனி மாநிலக் கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்து கொண்டுருக்கின்றன.








