படங்களில்: கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டம்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 16 நவம்பர், 2011 - 13:00 ஜிஎம்டி
  • இந்தியா தனது பெருகிவரும் மின்சக்தித் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள அணுசக்தியைக் கொண்டு தயாரிக்கப்படும் மின்சாரத்தை அதிகம் சார்ந்துள்ளது. கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை பல ஆண்டுகளாக அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது.
  • ஆனால் ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் அங்கு கடலோரத்தில் உள்ள ஃபுகுஷிமா அணுமின் நிலையம் சேதமடைந்து, பெரும் கதிர்வீச்சு அபாயம் உருவானதை அடுத்து, கடலோரத்தில் அமையக்கூடிய இந்த கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
  • கூடங்குளத்தை சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராடத் துவங்கினர். அரசாங்கம் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
  • போராட்டங்கள் கட்டுமீறிச் செல்லாமல் தடுக்க அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. போராட்டம் நடக்கக்கூடிய இடங்களில் பொலிசார் குவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களால் அணுமின் நிலையத்துக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக கூடங்குளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
  • சாலை மறியல், போக்குவரத்து தடை உள்ளிட்ட உத்திகளை போராட்டக்காரர்கள் கையாண்டு வந்துள்ளனர்.
  • இந்தப் போராட்டத்தின் விளைவாக மும்முரமாக நடந்துவந்த அணுமின் நிலையக் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
  • இந்த அணுமின் நிலையத்தின் ஒரு பிரிவு கூடிய விரைவில் மின் உற்பத்தியைத் துவங்கக்கூடிய நிலையில் இருந்தது.
  • ஆனால் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக திட்டமிடப்பட்ட காலத்தில் மின் உற்பத்தி துவங்க முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • ஆர்ப்பாட்டங்களின் காரணமாய் அணுமின் நிலைய ஊழியர்கள் நிலையத்துக்குள்ளேயே அடைபடும் நிலை உருவானது. பணிகள் முடங்கியதால் பணியாளர்கள் பலர் ஊர் திரும்பியும் இருந்தனர்.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.