|
இந்திரா மறைந்து 25 ஆண்டுகள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்தியாவின் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் ஒரே மகளான இந்திரா காந்தி 1966 இல் இருந்து 1977 வரையிலும் பின்னர் 1980 இல் இருந்து 1984 வரையிலும் இந்தியாவின் பிரதமர் பதிவியை வகித்தவர். இந்தியாவின் சர்ச்சைக்குரிய, அதே நேரத்தில் மிகவும் சக்தி படைத்த தலைவரான இந்திரா காந்தியின் 25 வது நினைவு நாளில் அவருக்கு பல்வேறு தரப்பட்டோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு அவர் கொண்டு வந்த அவசர நிலை அவரின் புகழுக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திராவின் அரசியல் வாழ்வு குறித்து நமது புதுடெல்லி செய்தியாளர் தங்கவேல் வழங்கும் குறிப்பை இங்கே கேட்கலாம்.
அதேவேளை பிரதமர் இந்திரா காந்தி பலரால் பலவிதமாக பார்க்கப்பட்ட - விமர்சிக்கப்பட்ட ஒரு தலைவர். சக்தி மிக்க தலைவராக அவர் வெளி உலகுக்கு இருந்த காலத்தில் கூட உண்மையில் அவர் தனி வாழ்வில் சற்று பாதுகாப்பு உணர்வில்லாத ஒருவராக இருந்ததாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் அவர் நாடு முழுவதிலும் மதிக்கப்பட்ட தலைவராகவும் விளங்கியுள்ளார். இந்திரா காந்தியின் சகாப்தத்தை இந்தியா எப்படி
நினைவு கொள்ளும் என்று சமகால வரலாற்று ஆய்வாளரான ராமச்சந்திர குஹா அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டார் நமது மணிவண்ணன்.
அந்த படுகொலைகள் நடந்து 25 ஆண்டுகளான பிறகும் அவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை என்கிற விமர்சனம் பலராலும் முன் வைக்கப்படுகிறது. இது குறித்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவரும் இந்து பத்திரிகையின் அரசியல் பகுப்பாய்வாளர் சித்தார்த் வரதராஜன் அவர்கள் இது குறித்து பிபிசியிடம் பேசினார். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||