BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 அக்டோபர், 2009 - பிரசுர நேரம் 13:50 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
முதுமையில் தாய்மை
 
 டாக்டர் என். பாண்டியன்
டாக்டர் என். பாண்டியன்
பெண்கள் வயது அதிகம் ஆன காலகட்டத்தில் தாய்மைப்பேறு அடைய விரும்புவது என்ற பிரச்சினை உலகின் பல நாடுகளில் காணப்படுகிறது.

செயற்கை கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட இந்த நிலையில், காலதாமதமான பின்னரும் தாய்மைப்பேறு என்பது மருத்துவ அறிவியலின் உதவியுடன் அடையக்கூடியதாக ஆகியுள்ளது.

ஆனால், மருத்துவ ரீதியாக இது சாத்தியமாகிவிட்டாலும் 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். மேலும், இவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் மருத்துவரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

மருத்துவப்பிரச்சினைகளைத் தவிர, சமூக, உளவியல் ரீதியான பிரச்சினைகளும் இம்மாதிரியான காலதாமதமான தாய்மைப்பேறு காரணமாக ஏற்படுகின்றன.

இந்தப் பிரச்சினை குறித்து சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு மருத்துவக் கருத்தரங்கில் கட்டுரை ஒன்றை வாசித்த , சென்னையைச் சேர்ந்த பிரபல செயற்கைக் கருத்தரிப்பு முறை மருத்துவரும், செட்டிநாடு ஹெல்த் சிட்டியின் செயற்கைக் கருத்தரிப்பு துறையின் பிரதான ஆலோசகருமான டாக்டர் என்.பாண்டியன் அவர்கள் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியை இங்கு நேயர்கள் கேட்கலாம்.


 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள