|
சவால்களுக்கு மத்தியில் வன்னி மாணவர்கள்...
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சிபாரிசையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். பெற்றோரைப் பிரிந்து தனியே சென்றுள்ள இந்த மாணவர்களுக்கு யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இருப்பிட வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார். இது விடயத்தில் யாழ் பல்கலைக்கழக நலச்சேவை, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பனவும் வேறு பொது நிறுவனங்களும் இணைந்து வசதிகளையும் நிதியுதவிகளையும் வழங்கியிருக்கி்ன்றன. இருப்பினும், யுத்தச் சூழ்நிலையின்போது வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருந்த கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் காரணமாகப் பல மாணவர்கள் திருமணம் முடித்து, இப்போது குழந்தைகளுடன் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளார்கள். இவர்களில் அனேகமானவர்கள் தமது குழந்தைகளுடன் கணவனை அல்லது மனைவியை இடைத்தங்கல் முகாமிலேயே விட்டுவிட்டு வர நேர்ந்திருக்கின்றது. உடல் அங்கங்களை இழந்துள்ள சில மாணவர்களும் இவர்களில் உள்ளடங்குகின்றனர். இந்த மாணவர்களின் கவலை தோய்ந்த குரல்களையும், அவர்களின் நிலைகுறித்து யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.சண்முகலிங்கம் தெரிவித்துள்ள கருத்துக்களையும் நேயர்கள் இங்கு கேட்கலாம்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||