|
பாதிக்கப்பட்ட சிறாரின் ஓவியங்கள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, வானவில் என்ற மகுடத்தி்ல் குழந்தைப் பருவத்தின் பிரதிபலிப்புக்களைக் கொண்ட ஓவியக் கண்காட்சியொன்று இலங்கையின் வடக்கே வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.வவுனியா உளசமூக மன்றத்தினர் இதனை ஒழுங்கு சொய்திருந்தார்கள்.
இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களினால் தீட்டப்பட்ட ஓவியங்களே இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
அண்மைய மோசமான போர்ச்சூழலின்போது, பெரும் உள நெருக்கீடுகளுக்கு ஆளாகியிருக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள உளவியல் பாதிப்புக்கு இந்த ஓவியங்கள் ஒரு வடிகாலாக அமைந்திருந்தன என்று வவுனியா மனநல வைத்திய பிரிவைச் சேர்ந்த வைத்தியர் எஸ்.சிவதாஸ் குறிப்பிடுகின்றார்.
முன்னாள் போராளிச் சிறுவர்களின் ஓவியங்களும் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன
நிரந்தரமான ஓர் அமைதிக்காக இந்த சிறுவர்கள் ஏங்குவதை இங்கு வைக்கப்பட்டிருந்த அநேகமான ஓவியங்கள் பிரதிபலிப்பனவாக இருந்தன.
போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கையை சிறப்பான முறையில் திட்டமிட வேண்டிய கட்டாயத் தேவை இருக்கின்றது என்பதை இந்த ஓவியக் கண்காட்சியின் மூலம் ஏற்பாட்டாளர்கள் வெளிக்கொண்டு வர முயற்சித்துள்ளனர். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||