BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 அக்டோபர், 2009 - பிரசுர நேரம் 14:26 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தமிழ்நாட்டில் டைனோசோர் முட்டை
 
சொரோபொட்ஸ் டைனோசோர்
பிரம்மாண்ட உருவம் கொண்டவை சொரோபொட்ஸ் டைனோசோர்கள்
தமிழ்நாட்டில் அரியலூர் அருகே உள்ள கிராமத்தில் கல்லாகிய நூற்றுக்கணக்கான டைனோசோர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆற்றுப் படுகை அருகே நிலவியல் விஞ்ஞானிகள் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தபோது, குவியல் குவியலான கல்லாகிய முட்டைகள் மண்ணாலான கூடுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கல்லாகிய முட்டைகள் பார்ப்பதற்கு டினோசோர் முட்டைகள் போல இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவை ஆறு கோடியே ஐம்பது லட்சம் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொன்றும் ஒரு கால்பந்து அளவில் இருக்கின்ற இந்த முட்டைகள் சொரோபோட்ஸ் எனப்படும் கழுத்து நீண்ட தாவர உண்ணி டைனோசோர் வகையை சேர்ந்தவை என்று ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

டைனொசோர் இனம் ஏன் அழிந்தது என்பது பற்றி கூடுதல் விபரம் அறிய இக்கண்டுபிடிப்பு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்த முட்டைகளை கண்டுபிடித்த ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த பெரியார் பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையின் உதவிப் பேராசிரியர் முத்து வைரவசாமி ராம்குமார் தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள