BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 25 செப்டம்பர், 2009 - பிரசுர நேரம் 11:39 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
எய்ட்ஸ் தடுப்பு மருந்து: ஆராய்ச்சியில் முன்னேற்றம்
 
எய்ட்ஸ் தடுப்பு மருந்து பரிசோதனைகளில் முன்னேற்றம்
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான ஹெச்.ஐ.வி. கிருமியின் தொற்றைத் தடுக்க உதவும் ஓர் தடுப்பு மருந்தின் மீது பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ள பரிசோதனைகளின் முடிவுகள் ஊக்கம் தருவதாய் அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தாய்லாந்தில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்டுள்ள இந்த மருந்துப் பரிசோதனை அமெரிக்க இராணுவத்தின் நிதி உதவியோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன் இந்த தடுப்பு மருந்து பரிசோதனை ஆரம்பமானது. எய்ட்ஸை உண்டாக்கும் நோய்க்கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் அண்மைய ஆண்டுகளாக ஓர் தேக்கநிலை இருந்து வந்தது.

தன்னார்வலர்களில் ஒரு பகுதியினருக்கு புதிய தடுப்பு மருந்தும் இன்னொரு பகுதியினருக்கு வெற்று ஊசியும் போடப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு வெற்று மருந்து கொடுக்கப்பட்டவர்களை விட முப்பது சதவீதம் கூடுதலாக ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்துள்ளது.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள