BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 15 செப்டம்பர், 2009 - பிரசுர நேரம் 12:32 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மறைந்தார் பசுமைப் புரட்சியின் தந்தை
 
நார்மன் போர்லாக்
நார்மன் போர்லாக்
அமெரிக்காவில் அண்மையில் காலமான பசுமைப் புரட்சியின் தந்தை என்று கருதப்படும் நார்மன் போர்லாக் சாதனைகள் குறித்து இந்தியாவில் பசுமைப் புரட்சித் திட்டங்களை செயற்படுத்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன்.

உலக அளவில் உணவு பற்றாக் குறையை தீர்க்கும் முகமாக அதிக விளைச்சலை கொடுக்கக் கூடிய கோதுமை ரகத்தை கண்டுபிடித்து, அதை உலகம் முழுவதும் பரப்பியதன் மூலம் பல நாடுகளை பஞ்சத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியவர் நார்மன் போர்லாக் என்று பிரபல வேளான் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

எம்.எஸ்.ஸ்வாமிநாதன்
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதிகளில் மக்களை பசி மற்றும் பட்டினியிலிருந்து காப்பற்றிய மிகப் பெரிய போராளி டாக்டர் நார்மன் போர்லாக் என்றும் அவர் கூறுகிறார். இதற்காக தமது வாழ்க்கையில் 70 வருடங்களுக்கும் மேலாக அயராது அவர் பாடுபட்டு வந்தார் என்றும் டாக்டர் சுவாமிநாதன் குறிப்பிடுகிறார்.

விஞ்ஞானத்தால் மட்டுமே உலகளவில் பசியை நீக்க முடியாது என்றும், அப்படி செய்வதற்கு அரசியல் உறுதிப்பாடு வேண்டும் என்பதில் அவர் திடமான நிம்பிக்கை கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்தார்.

பசியில்லாத ஒரு உலகம் வேண்டும் என்பதே வாழ்நாள் முழுவதும் நார்மன் போர்லாக்கின் லட்சியமாக இருந்தது என்றும் டாக்டர் சுவாமிநாதன் தெரிவிக்கிறார்.

மறைந்த டாக்டர் நார்மன் போர்லாக் அவர்கள் குறித்து டாக்டர் எம்.எஸ்.சுவாமிநதான் அவர்கள் வெளியிடும் கருத்துக்களை இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள