|
'செமென்யாவுக்கு கிடைத்த ஆதரவு எனக்கில்லை'
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை செமென்யா தனது பதக்கத்தை வைத்துக்கொள்ளலாம் என சர்வதேச தடகளம் அறிவித்துள்ளது பற்றி முன்பு
பதக்கம் இழந்த தமிழக வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் கருத்து.
பெர்லினில் கடந்த மாதம் நடைபெற்ற உலக தடகளப் போட்டிகளில், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கேஸ்டன் செமன்யா தங்கப் பதக்கம் வென்றார். ஆனால், அவர் உடலில் ஆண் தன்மை மிகுந்திருப்பதை குறிக்கும் ஹார்மோன்கள் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதனால் அவர் பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் ஓடியது சரியா என்றும் சர்ச்சை உருவானது. அதைத் தொடர்ந்து, அவரிடம் பாலியல் ஹார்மோன் பரிசோதனை நடத்தப்பட்டு, அது தொடர்பான முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், பரிசோதனை முடிவுகள் அவருக்கு பாதகமாக இருந்தாலும், அவர் தனது தங்கப் பதக்கத்தைத் திருப்பித்தர வேண்டியதில்லை என்று சர்வதேச தடகள சம்மேளனம் கருதுவதாக பிபிசிக்கு தெரியவந்திருக்கிறது. ஆனால், இதே காரணத்தால், 2006ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவைச் சேர்ந்த சாந்தி செளந்தரராஜன் அவர்கள், வென்ற வெள்ளிப் பதக்கம், அப்போது அவரிடமிருந்து திரும்பப்பெறப்பட்டது. அப்போது சாந்தியிடம் நடத்தப்பட்ட பாலியல் ஹார்மோன் பரிசோதனையில் அவர் உடலில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக காணப்பட்டதால் அவர் பெண்களுக்கான போட்டிகளில் பங்கேற்றது தவறு என்று முடிவு செய்யப்பட்டு, அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. தற்போது, செமன்யாவுக்கு மட்டும், முடிவு எப்படி இருந்தாலும் பதக்கத்தை வைத்துக் கொள்ள அனுமதியளிக்க சர்வதேச தடகள சம்மேளனம் முடிவு செய்திருக்கும் பின்னணியில், தன்னிடம் இருந்து பதக்கம் திரும்பப் பெறப்பட்டது குறித்து சாந்தி செளந்தரராஜன் தெரிவிக்கும் கருத்துக்களை நேயர்கள் இங்கே கேட்கலாம். |
பிபிசி இணைய தளங்கள்
சாந்திக்கு நீதி தேவை19 டிசம்பர், 2006 | நினைவில் நின்றவை
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||