BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தமிழிசைக்கு என்று ஒரு அகராதி வெளிவருகிறது
 
தமிழ் இசை அகராதி
தமிழ் இசை அகராதி

அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இசைச் சொற்களை கொண்டு தமிழ் மொழியில் ஒரு அகராதி வெளிவருகிறது.

தமிழிசைக்கான சொற்களை தேர்ந்தெடுத்து இந்த அகராதி தொகுக்கப்பட்டுள்ளதாக அதை தொகுத்துள்ள ஓய்வு பெற்ற தமிழக அரசு அதிகாரியான நா. மம்மது தமிழோசையிடம் தெரிவித்தார்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரையுள்ள தமிழை நூல்களில் இருந்து சொற்களை தேர்தெடுத்து, அகர வரிசைப்படுத்தி அதற்கான பொருளுடன் இந்த அகராதி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த அகராதியின் முதல் பதிப்பில் ஐயாயிரத்துக்கும் மேலான பதிவுகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த இசை அகராதி ஒரு துறை அகராதி என்றும் மம்மது அவர்கள் தெரிவிக்கிறார். பழங்கால தமிழிசை முதல் தற்காலத்தில் பாடப்பட்டு வரும் கர்நாடக இசை பாடல்கள் தொடர்பான சொற்களும் பதங்களும் அந்த அகராதியில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

இது குறித்து நா. மம்மது அவர்களின் பேட்டியை இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள