|
சவால்களைக் கடந்த சலங்கை ஒலி
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இந்தியா மற்றும் இந்து மதத்துடன் தொடர்புடையது என்று கருதப்படும் பரதநாட்டியத்தை ஐம்பது வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தானில் அரங்கேற்றி வருகிறார் 80 வயதாகும் இந்துமித்தா. பிரிக்கப்படாத இந்தியாவின் லாகூர் நகரில் ஒரு பாரம்பரிய பெங்காலி சாட்டர்ஜி குடும்பத்தில் கிறிஸ்த்தவராக பிறந்த இந்துமித்தா பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றிய ஒரு முஸ்லிம் அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். தனது திருமணத்துக்கு பின்னர் இராணுவக் குடும்பத்தினருக்கும் மற்றும் தான் பணியாற்றிய பள்ளியில் பயின்றவர்களுக்குமாக பரதநாட்டியம் அவர் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக கற்றுக் கொடுத்து வருகிறார். நாட்டின் வடமேற்கே தாலிபான்களுடானான தமது மோதல்களை பாகிஸ்தான் இராணுவம் அதிகரித்து வரும் நிலையில் பெஷாவர் பகுதியிலிருந்தும் மாணவர்கள் பரதம் கறக வந்துள்ளனர். ஆரம்ப காலங்களில் பரத நாட்டியத்துக்கான உடைகள் மற்றும் இசை போன்றவற்றை உள்ளூர் திறமைகளை வைத்து சமாளித்த அவர், அரசியல் மற்றும் சமூக ரீதியிலான சவால்களையும் சந்திக்க நேர்ந்தது. அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜியாவுல் ஹக் அவர்களின் ஆட்சி காலத்தில் நடனம் ஹராம் அல்லது தீயவை என்று கருதப்பட்ட நிலையிலும் துவண்டுவிடாமல் தனது கலைப்பணியை பாகிஸ்தானில் முன்னெடுத்து வந்தார் இந்துமித்தா. தான் சந்தித்த சவால்கள் மற்றும் அவற்றை கையாண்ட விதம் பற்றி அவர் வெளியிடும் கருத்துக்களை உள்ளடக்கி சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் சிறப்பு பெட்டகங்களை இங்கு கேட்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||