BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 21 ஆகஸ்ட், 2009 - பிரசுர நேரம் 17:56 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
மருதமடு திருத்தலம்
 
 மடு திருத்தலம்
மடு திருத்தலம்
மடு திருத்தல வளாகம் இனியொருபோதும் யுத்த பூமியாகாது என்கிறார் யாழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆண்டகை.

விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான கடந்த கால மோதல்களின் போது மடு மாதா ஆலய வளாகம் பெரும் நெருக்கடிகளை சந்தித்திருந்தது.

மருதமடு அன்னையின் திருநாள் கொண்டாடப்படுகின்ற இந்த சூழ்நிலையில் அந்த பிரதேச மக்கள் முள்ளுக்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களில் வாடுகின்றனர் எனவும் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை குறிப்பிட்டார்.

முகாம்களில் பல்வேறு துயரங்களை அனுபவித்துவரும் மக்கள் தமது வாழ்விடங்களுக்கு திரும்பி சுபீட்சமான வாழ்க்கையை வாழவேண்டும் என பிரார்த்திப்பதாகவும் ஆயர் தெரிவித்தார்.

மக்கள் பிரார்த்தனை

பிரார்த்தனையில் மக்கள்
பிரார்த்தனையில் மக்கள்
மடு மாதா திருத்தல திருவிழா வழிபாடுகளில் கலந்துகொண்ட மக்கள் போரின் வடுக்கள் நீங்கி நாட்டில் அமைதி நீடிக்க வேண்டுமென பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள