BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 ஜுலை, 2009 - பிரசுர நேரம் 14:14 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
"புலிகள் வற்புறுத்தினார்கள்"
 
மருத்துவர் ஷண்முகராஜா
மருத்துவர் ஷண்முகராஜா
விடுதலைப் புலிகளின் வற்புறுத்தல் காரணமாகவே ஊடகங்களுக்கு மிகைப்படுத்தப்பட்ட தகவலகளை வழங்கியதாக, யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் பணியாற்றியிருந்த அரச மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற இறுதி மோதல்களின்போது கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்களான சத்தியமூர்த்தி, ஷண்முகராஜா, வரதராஜா மற்றும் இளஞ்செழியன் உட்பட ஐந்து பேர் இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

போர் உக்கிரமாக நடைபெற்ற இறுதிக் கட்டத்தில், அரச விதிகளுக்கு எதிராக ஊடகங்களிடம் பேசியது, விடுதலைப் புலிகளுக்கு மருத்துவம் செய்தது, மருந்துகளை வழங்கியது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தமிழோசைக்கு வழங்கிய ஒரு சிறப்பு பேட்டியில் டாக்டர் ஷண்முகராஜா தெரிவித்தார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள