BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 03 ஜுலை, 2009 - பிரசுர நேரம் 12:13 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
ஓரினச் சேர்க்கை குற்றமல்ல: இந்திய நீதிமன்றம்
 
இந்தியாவில் வயதுக்கு வந்தவர்கள் மத்தியில் பரஸ்பர ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படும் ஒரு-பால் புணர்ச்சி குற்றச்செயல் அல்ல என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பைக் கொண்டாடும் ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்கான ஆர்வலர்கள்

03/07/2009

வயதுக்கு வந்தவர்களுக்கு இடையிலான பரஸ்பர சம்மதத்துடன் மேற்கொள்ளப்படும் ஒருபாலுறவு சட்டப்படி குற்றமல்ல என்று இந்திய தலைநகர் புது தில்லியின் உயர்நீதி மன்றம் தீர்ப்புஅளித்துள்ள இத்தருணத்தில், இத்தீர்ப்பு குறித்து அண்டை நாடான இலங்கையில் வாழும் ஒருபாலுறவுக்காரர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது பற்றி கொழும்பில் இருக்கும் ஒருபாலுறவுக்காரர்களுக்கான அமைப்பு ஒன்றைச் சேர்ந்த கிருத்திகா தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார்.

02/07/2009

ஒருவரின் பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் அந்த நபர் சட்டரீதியில் குற்ற வாளியாக கருதப்படும் இந்திய அரசியல் சட்டத்தின் 377 வது பிரிவை மாற்றியிருக்கும் இந்த தீர்ப்பானது, இந்தியாவில் நிலவிவந்த பாலியல் விழைவு அடிப்படையிலான பாரபட்சத்தை போக்கியிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று ஒரு சாரார் வரவேற்றுள்ளனர்.

அதேசமயம் இது இந்திய கலாசார சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று மற்ற தரப்பினர் எதிர்த்துள்ளனர்.

சென்னையில் இருக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கான அமைப்பான சக்தி மையம் என்கிற அமைப்பின் உறுப்பினர் அனிருத் அவர்கள் இத்தீர்ப்பு குறித்து தமிழோசையிடம் கருத்துவெளியிட்டார்.

இந்த தீர்ப்பை திருநங்கைகளும் வரவேற்பதாக அவர்களுக்கான அமைப்பைச் சேர்ந்த கல்கி தெரிவிக்கிறார்.

ஒருபாலுறவை சட்டரீதியில் அங்கீகரிக்கும் இந்த தீர்ப்பு, பாலியல் தொடர்பிலான இந்தியர்களின் புரிதலை, குறிப்பாக ஒருபால் உறவுக்காரர்கள் தொடர்பிலான சமூக புரிதலை மேம்படுத்த உதவும் என்று கூறுகிறார் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருக்கும் பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.


30/06/2009

இந்தியாவில் ஒருபால் உறவை சட்டவிரோதமானது என்று கூறும் இந்திய அரசியல் சட்டத்தின் 377ஆவது பிரிவை திருத்த வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து நாடு தழுவிய விவாதம் நடத்தியபிறகே இந்திய நடுவணரசு இறுதி முடிவெடுக்கும் என்று இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து, நாடு தழுவிய அளவில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஊடாக விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும், இந்திய நாடாளுமன்றத்திலும் இது குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவரது இந்த நிலைப்பாடு, இவருக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் எடுத்திருந்த நிலையிலிருந்து மாறுபட்ட நிலைப்பாடாக இருக்கிறது.

இந்தியாவில் ஒருபால் உறவை சட்டவிரோதமாக வைத்திருப்பதானது ஒரு-பால் உறவுக்காரர்கள் மத்தியில் எயிட்ஸ் விழிப் புணர்வை ஏற்படுத்துவதில் மிகப்பெரிய தடையாக இருப்பதால், இந்த சட்டப்பிரிவு திருத்தப்படவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறிவந்தார்.

இதற்கு ஆதரவாக இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் அவர் நடுவணரசுக்கு தொடர்ந்து அழுத்தமும் கொடுத்துவந்தார்.

இந்த பின்னணியில் குலாம் நபி ஆசாத்தின் தற்போதைய அறிவிப்பு ஒரு-பால் உறவுக்காரர்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பில் ஈடுபட்டுவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து எயிட்ஸ் நோய் தடுப்புத் துறையில் செயற்பட்டுவரும் சென்னையை சேர்ந்த மருத்துவர் சுந்தரராமன் தமிழோசையிடம் பேசினார்

ஓரினச் சேர்க்கை குற்றமாக்கும் சட்டத்தை அகற்றக்கூடாது என்று இந்து முன்னணி விரும்புகிறது. இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராமகோபாலன் அது பற்றி தமிழோசையில் கருத்து வெளியிட்டார்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள