|
மைக்கல் ஜாக்சன்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மறைந்த இசைச் சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை, சாதனைகளும் வேதனையும் நிறைந்தது.
சிறு வயது முதலே தனது சகோதரரர்களுடன் மேடையேறிய மைக்கல் ஜாக்சன் அவர்கள், நவீன இசையுலகை தனது ஆழுமையால் கட்டிப் போட்டிருந்தார். அதேவேளை, பல்வேறு சர்ச்சைகளும் அவரது வாழ்வில் நிறைந்தே காணப்பட்டன. அவரது வாழ்க்கை பற்றிய ஒரு சிறு குறிப்பை இங்கே நேயர்கள் கேட்கலாம்.
மைக்கல் ஜாக்சன் ஒரு பிரபல பாடகர் என்பதையும் தாண்டி நூறு கோடி டாலர்கள் பெறுமதியுள்ள ஒரு தொழில்துறையாகவும் இருந்தார். கிங் ஒஃப் பாப் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சன் பிரம்மாண்ட வருமானம் கொண்டவராக இருந்த அதே நேரம் 50 கோடி டாலர்கள் கடனாளியாகவும் இருந்ததார். மைக்கல் ஜாக்சன் விட்டுச் செல்லும் நிதிநிலையின் சிக்கல்களை அலசும் செய்திக் குறிப்பு.
உலகு தழுவிய அளவில் வெகுஜனங்களின் கலை வடிவமாக பார்க்கப்படும் பாப் இசை உலகில் மைக்கேல் ஜாக்சன் பெரும் வெற்றி பெற்றதற்கான காரணிகள் எவை என்பது குறித்தும், தமிழர்களின் வெகுஜன தொழில்நுட்ப கலைவடிவமான திரைப்படத்துறையில் மைக்கேல் ஜாக்சனின் ஆளுமை குறித்தும் சென்னையைச் சேர்ந்த கலை விமர்சகர் சதானந்த மேனன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||